
தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்க பாதுகாப்புப் புலனாய்வுச் சேவையிலிருந்து புலிகளின் இராணுவப் புலனாய்வு வேறாக சார்ல்ஸ் சண்முகம் ரவிசங்கர் என்பவரால் வழிநடத்தப்பட்டது. இவர் இலங்கை படைத்துறையின் ஆழ ஊடுருவித்தாக்கும் படையணியின் ‘கிளைமோர்’ தாக்குதலில் ஜனவரி 2008 இல் மன்னார் மாவட்டத்தின் பாலமடுவில் வீரச்சாவை தழுவிக்கொண்டார்.