ஈழ தேசத்தின் வடக்கே கிளிநொச்சி மாவட்ட பிரதேச எல்லைக்குள் பச்சிளைப்பள்ளி வலையத்துக்கு உட்பட்ட முள்ளிப்பற்று முகாவில், இயக்கச்சி, சங்கத்தார்வயல், ஊர்வணி, கன்பற்று, ஆனையிறவு, மண்டலாய், வயல்விடுதி, பேராலை போன்ற கிராமங்களை உள்ளடங்கிய ஒரு பேரூரின் பெயராகும்.
பற்று என்பது ஊரைக் குறிப்பதாகவும் முள்ளி என்பது முள்ளிச் செடியை குறித்திருக்கலாம் என கருதப்படுகிறது. முள்ளிச் செடிகள் அதிகமாக இப்பிரதேசத்தில் காணப்படுவதால் முள்ளிப்பற்று என பெயர் வந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
கிராமங்களின் எழுச்சி தனித்துவம் மிளிர தனிப்பட்ட கிராமங்களின் பெயர் மேலோங்கி பேரூர்களின் பெயர்கள் வழக்கொழிந்து போவது போல, முள்ளிப்பற்று என்ற பேரூரின் பெயர் வழக்கொழிந்து வருகிறது தற்போது முள்ளிப்பற்று கிரமசபைக்கு மட்டும் உள்ள பெயராக காணப்படுகின்றது.
ஈழப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய பல ஊர்களை உள்ளடக்கிய பேரூராகும் பல ஈழ போர்கள் நடந்த ஊர்களை தன்னகத்தே அடக்கி நிற்கும் ஊர்களை கொண்ட பிரதான பெரூர் முள்ளிப்பற்றாகும்.
– வட்டக்கச்சி
– வினோத்