திருமலை மூதூரில் 1986.07.18 அன்று அதிகாலை 3.00 மணியளவில் மணற்சேனை, பெருவெளி எனும் கிராமங்களை சுற்றிவளைத்த சிறிலங்கா இராணுவத்தினர் இங்கு நாற்பத்துநான்கு பொதுமக்களைக் கைதுசெய்து கொண்டுசென்று சுட்டுப்படுகொலை செய்தனர். இதில் அனைவரும் உயிரிழந்தனர்.
இவர்களில் பெரும்பாலானோர் மேன்காமம், கங்குவெளி, மல்லிகைத்தீவு ஆகிய கிராமங்களிலிருந்து இராணுவத்தின் அச்சுறுத்தல்,படுகொலைசம்பவம் அதிகரித்ததன் காரணமாக பாதுகாப்புத் தேடி அகதிகளாக வந்தவர்களாவர்.
மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.