×

30 வயதில் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மார்ச் 1984 ல் நாளிதழ் ஒன்றிற்கு கொடுத்த பேட்டி…

கேள்விகளும் பதில்களும் 👇

கேள்வி :

அமெரிக்காவிலிருந்து சிறீலங்காவிற்குப் பெருமளவில் ஆயுதங்களும், உபகரணங்களும் வந்து குவிவதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: இந்த ஆயுதக்குவிப்பு தமிழீழ விடுதலைப் போராட் டத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்பிற்கும் ஆபத்து விளைவிக்கக்கூடியது. சிறீலங்கா இராணுவத்திற்கு உதவிசெய்து தமிழீழ சுதந்திரப் போராட்டத்தை நசுக்குவது மட்டும் அமெரிக்காவின் நோக்கமல்ல என்பது உங்களுக்குத் தெரிந்ததே. திருகோணமலையில் ஒரு கடற்ப்படைத் தளத்தை அமைத்துக்கொள்வது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கபட நோக்கம். இது இந்து சமுத்திரப் பகுதியை யுத்தப் பிராந்தியமாக மாற்றுவதுடன் இப்பிர தேசத்தில் யுத்த நெருக்கடியை உண்டுபண்ணும்.

கேள்வி: எப்படியோ ஒருகாலம் தமிழீழம் கைகூடிவிட்டால் அது எவ்வகையான நாடாக அமையுமென நீங்கள் நினைகிறீர்கள்?

பதில்: தமிழீழம் ஒரு சோசலிச அரசாக அமையப் பெறும். சோசலிசம் என்பதன் மூலம் சமத்துவமான சமூக அமைப்பை நான் கருதுகிறேன். இதில் மனித சுதந்திரத்திற்கும், தனிநபர் உரிமைகளுக்கும் உத்தரவாதமுணடு. எல்வாவித ஓடுக்குமுறையும் சுரணடலும் ஒழிக்கப்பட்ட மக்களின் உண்மையான ஜனநாயகமாக அது நிகழும். தமிழ் மக்கள் தங்களுடைய பொருளா தாரத்தைப் பேணி வளர்த்து தமது கலாசாரத்தை மேம்பாடு செய்யும் வகையில் அவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகள் கிடைக்கின்ற ஒரு சுதந்திரச் சமூகமாகத் தமிழீழம் அமையும். இந்தச் சுதந்திரத் தமிழீழம் நடுநிலை நாடாக இருப்பதுடன் அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடிக்கும். அத்தோடு இந்தியாவோடு நேச உறவு கொண்டு அதன் பிராநதியக் கொள்கைகளை, குறிப்பாக இந்துமகா சமுத்திரத்தை ஒரு சமாதானப் பிராந்தியமாக்கும் வெளிநாட்டுக் கொள்கையைக் கௌரவிக்கும்.

கேள்வி: உங்கள் கணிப்பில் தமிழீழத்தை எப்போது அடைவீர்கள்?

பதில்: விடுதலைப் போராட்டத்திற்கு கால வரை யறையோ அல்லது ஒரு பூர்வாங்கத் திட்டமோ இருக்க முடியாது. தமிழீழத்திலும் உலக அரங்கிலும் உருவாகும் நிலைமைகளைப் பொறுத்து இது அமையும்….

மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மார்ச் 1984 ல் நாளிதழ் ஒன்றிற்கு கொடுத்த பேட்டி…

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments