×

ஊர் நோக்கி – பளை

ஈழ தேசத்தின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தின் நிர்வாக எல்லைக்கு உட்பட்ட பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்தின் முக்கிய பிரதான ஊராக இருக்கும் நகரே பளை இவ் ஊர் பச்சிளைப்பள்ளிப் பிரதேசத்தின் நகராகவும் காணப்படுகிறது. பளையும் ஒரு பேரூர் ஆகும்.

பெரிய, பளை, அல்லிப்பளை, புலோப்பளை, தம்பகாமம், வண்ணாங்கேணி, முல்லையடி, கச்சாரவெளி, அரசர் கேணி, செந்தில்நகர், இத்தாவில், வேம்பொடுகேணி, தர்மங்கேணி, சோறன்பற்று, மாசார் போன்ற சிறிய ஊர்களை உள்ளடக்கிய ஒரு பேரூரே பளையாகும். குறிப்பாக பளை மத்திய நகராமாக காணப்படுகிறது. பல அரச நிர்வாக அலுவலகங்கள் பளை மத்திய நகரை சுற்றியே காணப்படுகின்றது.

பச்சிளைப்பள்ளி பிரதேசம்
பளை கமநல சேவை நிலையம்
பளை கூட்டுறவுச் சங்கம்
பனை தென்னை கூட்டுறவுச் சங்கம்
பளை வைத்தியசாலை
பளை தபால் நிலையம்
பளை காவல் நிலையம்
பளை மத்திய கல்லூரி
பளை புகைரத நிலையம்
பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை
பளை அங்காடி மற்றும் பிரதான வியயாபார நிலையங்கள் பளை நகரை அண்மித்துக் காணப்படுகின்றது.

இப் பழை என்னும் பெயர் பழமையானது, பழய ஊர். தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்த பழைய ஊர். பின்னர் பளை என வந்திருக்கலாம் என அறிய முடிகிறது.

பனையும் தென்னையும் குடை பிடித்து நிழலோடு வளம் தரும் ஊரே பளை. விவசாயம், பெருந்தோட்டம், கைத்தொழில் என ஈழ தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் ஊர் பளையாகும்.

பளை ஈழ போராட்ட காலத்தில் மிக முக்கியமான கால கட்டமான இறுதிக்கட்ட யுத்தம் தொடங்கிய 2006 காலப்பகுதியில் முகமாலை முன்னரங்கை காப்பாற்ற இருந்த பின் தளப் பணிகளுக்கு இராணுவ கேந்திர நிலையமாக செயற்பட்டது. வீழ்த்தப்படாத முகமாலை முன்னரணுக்கு பின் துணையாக இருந்தது பளை பிரதேசமாகும். பல இடம்பெயர்வுகள் அழிவுகளை சந்தித்து மீண்டு எழுந்து நிற்கிறது பளை.

வட்டக்கச்சி
வினோத்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments