×

Pampai/ பம்பை

பம்பை என்ற நாட்டுப்புற தோல் இசைக்கருவி நாட்டுப்புற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் பின்னணி (வாத்தியமாக) இசைக் கருவியாக இடம் பெறுகின்றது. நாட்டுப்புற இசைக்கருவிகள் நாட்டுப்புற மக்களிடம் தோன்றி, வழங்கி வருவது. மேலும் இந்த இசைக்கருவி நையாண்டி மேளம், கரகம், காவடி, பொய்க்கால் குதிரை முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்கும் பின்னணி வாத்தியமாக இடம் பெறுகின்றது.

நையாண்டி மேளம் என்பது இரண்டு நாதசுரம், இரண்டு தவில், இரண்டு பம்பை, ஒரு உறுமி, ஒரு கிடிமுட்டி அல்லது சிணுக்குச்சட்டி, ஒரு சுதிப்பெட்டி ஒரு தாளம் கொண்டதாகும். தமிழ் நாட்டுப் பகுதிகளில் இவ்வாறு தான் நையாண்டி மேளம் அமைந்துள்ளது.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments