நாட்டுப்பற்றாளர்
சிலருக்கு யாருமறியாத வேரின் வாழ்வு.
பாரம் சுமப்பதிலும்
இவர் தோள்களே அதிகம் சுமந்துள்ளன.
விடுதலையை உன்ளே விரித்தபடி
தலைமுறை கடந்தும் பயணித்தனர் பலர்.
வாழ்வின் சுமை ஏந்தியும்
தாயகத்தின் தாகம் சுமந்தும்
தீராச்சுமையராய் இருந்தவரே அதிகம் பேர்.
விடுதலையை எழுதிச் சென்றனர் சிலர்
எடுத்துச் சென்றனர் பலர்.
பகையிருந்த வாசலில் கூட அச்சமின்றி
விடுதலையைக் கூடவே அழைத்துச் சென்றனர் பலர்.
“நாட்டுப்பற்றாளர்”
வாழ்வுக்கு அர்த்தம் சொல்லியவர்.
வந்தோம் – இருந்தோம் – சென்றோம் என்றவர் மத்தியில்
இவர்களின் வாழ்வு வித்தியாசமானது.
இன்றைய வாழ்வின் கணத்தில் கரைந்து
நாளைய வாழ்வின் பொழுதில் சிறந்து
வழிகாட்டிப் போகின்றனர் இவர்.
சாவுடன் முடிந்துவிடாத காவியமாய்
எம் தேசத்தில் இருப்பவர் நெடுங்காலமாய்
வணக்கத்துக்குரியவராய்.
PFD – நாட்டுப்பற்றாளர் – சிலருக்கு யாருமறியாத வேரின் வாழ்வு.