04-08-2006 அன்று ஈழத்துக் கலைஞர், நேர்மையான மக்கள்வங்கி முகாமையாளர் மாமனிதர் பொன்.கணேசமூர்த்தி அவர்கள் அரச கூலிகளால் யாழ்ப்பாணத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
கலை இலக்கிய பணியாற்றலின் விடுதலை பாதையில் இவரது வரலாறு பதிந்துள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இவர் ஆற்றிய பங்களிப்புக்கு மதிப்பளித்து, படுகொலை செய்யப்பட்ட ஐயா பொன். கணேசமூர்த்தி அவர்களுக்கு தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் மார்ச் 15, 2008 இல் மாமனிதர் விருது வழங்கி மதிப்பளித்தார்…..
அத்துடன் அவரின் படைப்புகள் பல
இவர் எழுதி வெளியிடப்பட்ட நூல்கள்
“தூரம் தொடுவானம்” (நாவல்)
“துளித்துளி வைரங்கள் “Droplet Diamonds” (தமிழ்-ஆங்கில கவிதைத் தொகுதி)
“எடுக்கவோ தொடுக்கவோ” (கவிதைத்தொகுதி)
“இலங்கை மண்” (நாடகம், 2008)
“துளித்துளியாய்..” (நாவல்)
இவரால் இயற்றப்பட்டு சிட்டு அவர்களால் பாடப்பட்ட “புலி ஒருகாலமும் பணியாது ” என்று தொடங்கும் பாடல் மிகவும் பேசப்பட்ட பாடல்.