பெயர் : பொன்னுத்துரை சிவகுமாரன் ஊர் : உரும்பிராய் ,யாழ்ப்பாணம் தமிழீழ விடுதலைக்காக நஞ்சுண்டு உயிர் நீத்த முதல் மாவீரன் .இலங்கை அரசின் கல்வி தரப்படுத்துதல் கொள்கைக்கு எதிராகத் தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையின் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட இவர் .1970 களின் தொடக்கத்திலேயே சிங்கள அரசின் கைகூலிகளுக்கு எதிராக இரண்டு ஆயுதத் தாக்குதல்களை நடத்தியவர். அதற்காக கைது செய்யப்பட்டு மூன்றாண்டு காலம் சிறைவாசம் அனுபவித்தவர்.
சிறையிலிருந்து மீண்ட பின் ,பிறிதொரு தாக்குதலை நடத்த முற்பட்ட போது ,சுற்றி வளைத்த சிங்கள இராணுவத்திடம் பிடிபடாமல் இருக்க சயனைட் நஞ்சருந்தி வீரச்சாவு. இவரது சாவு பல இளைஞர்களை ஆயுதப் போராட்டத்தை நோக்கி எழுச்சியுடன் வரச் செய்தது . இவரது குண்டுத்தாக்குதலுக்குத் தப்பி உயிர் பிழைத்த ஆல்பிரட் துரையப்பாவை 1975-ஆம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் சுட்டுக்கொன்ற நிகழ்வே, தேசியத் தலைவரை மக்களிடையே முதன் முதலாக புகழ்பெற வைத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாகும் . சிவகுமாரன் வீரச்சாவு அடைந்த நாள் “தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக “நினைவு கொள்ளப்படுகிறது .