ஆசியக் கண்டத்தில் ஐரோப்பிய அந்திய ஆதிக்கத்தை எதிர்த்து முதல்முதலாகப் புரட்சிக்கொடியை உயர்த்திய பெருமைக்குருயவர் தென்தமிழகத்தின் நெற்கட்டும்செவல் பாளையக்கார்ரான பூலித்தேவன் ஆவார் .1751 ஆம் ஆண்டிலிருந்து 17 ஆண்டுகள் ஆர்காட்டு நவாபையையும் ஆங்கிலேயரையும் எதிர்த்துப் போராடினர் .
1751 இல் ஆங்கிலேய தளபதி கின்னிஸ் 1755 இல் ஆங்கிலத்தளபதி கர்னல் ஹெரான் ஆகியோர் பூலித்தேவனிடம் தோல்வி கண்டனர் . நவாபையும் ஆங்கிலேயரையும் எதிர்த்து பாளையக்காரர்களின் கூட்டிணைவு ஒன்றை பூலித்தேவன் கட்டமைத்தார். கான்காசிப் எனப் புகழ்பெற்ற யூசுப்கான் (முன்பு மருதநாயகம் என்ற தமிழர் ) ஆங்கிலக் கம்பனியின் தளபதியாகப் படை நடத்தி ,பூலித்தேவனை அடக்க மூன்று ஆண்டுகள் போராடினார் .1765 மே மாதம் ,ஆங்கிலத் தளபதி கர்னல் டொனால்டு காம்பெல் பூலித்தேவனின் வாசு தேவநல்லூர் கோட்டையைத் தாக்கினார்.
வீரம் செறிந்த ஆனால் முடிவற்ற போருக்குபின் மேற்கு மலைத்தொடர் பகுதிக்குள் பூலித்தேவன் சென்றுவிட்டார் . வஞ்சகமாக ஆங்கிலேயரிடம் பிடித்துக்கொடுக்கப்பட்டு பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில், பூலித்தேவன் வியக்கத்தக்க வகையில் மாயமானார் .
நன்றி. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்