×

பொத்துவில் படுகொலை – 30.07.1990.

1990ஆம் ஆண்டில் மீண்டும் யுத்தம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இலங்கையில் கிழக்குப் பகுதியில் இராணுவத்தினராலும் சிங்கள முசுலிம் குழுக்களாலும், ஊர்காவற் படையினராலும் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் தாக்கப்பட்டனர். 1990.06.15இல் பொத்துவில் கிராமத்தில் இராணுவத்தினரும் முசுலிம் குழுக்களுடன் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களின் காரணமாக பாதுகாப்புத் தேடிய மக்கள் இடம்பெயர்ந்து கோமாரி அகதி முகாமில் தஞ்சமடைந்தனர்.

இராணுவத்தினரதும் அரச அதிகாரிகளினதும் வேண்டுகோளையும் வாக்குறுதிகளையும் நம்பி 1990.07.30இல் பொத்துவில் கிராமத்திற்கு மீண்டும் திரும்பி வந்து பார்தத் போது வீடுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டிருந்ததுடன், வீடுகள் எரித்துச் அழிக்கப்பட்டிருந்தன. இதனால் மக்கள் தமது வீடுகளை விட்டுப் பொத்துவில் மெதடிஸ்த மகா வித்தியாலயத்தில் மீண்டும் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர்.

பொத்துவில் மெதடிஸ்த மகாவித்தியாலயத்தில் தங்கியிருந்த மக்களில் இளைஞர்கள், யுவதிகள் தமது குடும்பத்தினைக் காப்பாற்றுவதற்காக வேலைக்குச் சென்றார்கள். இவர்களில் நூற்றுமுப்பத்திரண்டு பேர் இராணுவத்தினராலும் முசுலிம் குழுக்களாலும் கைதுசெய்யப்பட்டு பொத்துவில் காவற்றுறை நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு இவர்களில் சிலர் சிலராகத் தெரிந்தெடுத்து காவற்றுறை நிலையத்திலிருந்த வெட்டவெளியில் கை கால்களைக் கட்டி உயிருடன் போட்டு எரித்தார்கள்.

கைது செய்யபப் ட்டவர்களில் ஒரு சிலர் தப்பித்துக் கொள்ள எஞ்சியோரை 1990.08.02 பொழுது விடிவதற்கு முன்னர் ரயரில் உயிருடன் போட்டு எரித்தார்கள். இவ்வாறு இராணுவத்தினராலும், முசுலிம் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் நூற்றுஇருபத்தைந்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள்.

30.07.1990 அன்று பொத்துவிற் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:

  1. மூத்ததம்பி இராசநாயகம் (வயது 33)
  2. இளையதம்பி கிருபாகரன் (வயது 39 – தொழிலாளி)
  3. இளையதம்பி கருணாகரன் (வயது 23)
  4. இராஜதுரை கமலநாதன் (வயது 03 – குழந்தை)
  5. இராமலிங்கம் ஈஸ்வரன் (வயது 23)
  6. சத்தியநாதன் பத்மநாதன் (வயது 32)
  7. நாகமணி குணசீலன் (வயது 25)
  8. நாமணி சிந்தாத்துரை (வயது 45 – கடற்றொழில்)
  9. நடராசா சவுந்தரராசா (வயது 19)
  10. நல்லதம்பி பாக்கியராசா (வயது 23)
  11. சன்னாசி சுப்பிரமணியம் (வயது 34)
  12. கனகசபை நவராஜா (வயது 26)
  13. கனகசபை கிருபைராசா (வயது 30 – தொழிலாளி)
  14. கனகசபை தவராசா (வயது 26 – தொழிலாளி)
  15. கனகரத்தினம் சின்னராசா (வயது 52)
  16. கனகரட்ணம் சின்னராசா (வயது 27)
  17. கந்தையா நல்லதம்பி (வயது 33)
  18. கந்தையா கணேஸ் (வயது 16 – மாணவன்)
  19. கந்தையா தருமரத்தினம் (வயது 32)
  20. கந்தையா சிவகுமார் (வயது 27)
  21. கந்தையா சிவகுமரன் (வயது 22)
  22. கந்தையாப்பிள்ளை சிவசுப்ரமணியம் (வயது 26)
  23. கந்தையாப்பிள்ளை சிவசுந்தரன் (வயது 26)
  24. கந்தன் நவரட்ணம் (வயது 21)
  25. கந்தப்பன் ஆனந்தன் (வயது 26 – தொழிலாளி)
  26. காத்தமுத்து சுனில் (வயது 35 – தொழிலாளி)
  27. காளிக்குட்டி அமிர்தலிங்கம் (வயது 27)
  28. கணேசபிள்ளை சந்திரன் (வயது 36)
  29. கிருஸ்ணன் அழகையா (வயது 24 – தொழிலாளி)
  30. கண்ணாச்சி சுப்பிரமணியம் (வயது 34)
  31. கணபதி பத்மநாதன் (வயது 25 – தொழிலாளி)
  32. கணபதிப்பிள்ளை தருமரட்ணம் (வயது 51 – தொழிலாளி)
  33. கணபதிப்பிள்ளை யோகநாதன் (வயது 20 – தொழிலாளி)
  34. கணபதிப்பிள்ளை செல்வரட்ணம் (வயது 35 – தொழிலாளி)
  35. கணபதிபிள்ளை தெய்வேந்திரன் (வயது 23)
  36. பக்கிரி சிற்றம்பலம் (வயது 30)
  37. பாலன் ஜெயானந்தம் (வயது 25 – தொழிலாளி)
  38. பத்மநாதன் விக்னேஸ்வரன் (வயது 14 – தொழிலாளி)
  39. பத்மநாதன் ரவீந்திரன் (வயது 40 – தொழிலாளி)
  40. ஐயப்பன் செல்வராசா (வயது 41 – தொழிலாளி)
  41. தர்மலிங்கம் பாஸ்கரன் (வயது 13)
  42. தம்பியர் தேவசுந்தரம் (வயது 70 – பாதுகாவலர்)
  43. தம்பிப்பிள்ளை பூபாலப்பிள்ளை (வயது 32 – தொழிலாளி)
  44. தம்பிமுத்து கிருஸ்ணபிள்ளை (வயது 52)
  45. தம்பிராசா இராசகுமார் (வயது 18 – தொழிலாளி)
  46. தம்பிராசா மனோகர் (வயது 38 – தொழிலாளி)
  47. தம்பிராசா தேவசுந்தரம் (வயது 65 – தொழிலாளி)
  48. திசாநாயகக் ஒபேசேகர (வயது 42 – தொழிலாளி)
  49. திசாநாயக்கா சபேசர் (வயது 19 – மாணவன்)
  50. திலகரட்ணம் பாரதி (வயது 24 – தொழிலாளி)
  51. திலகரட்ணம் லலித் (வயது 23 – தொழிலாளி)
  52. தங்கராசா மகேந்திரன் (வயது 17 – தொழிலாளி)
  53. தருமலிங்கம் இராசேந்திரன் (வயது 26)
  54. தருமலிங்கம் கணேசமூர்த்தி (வயது 23 – தொழிலாளி)
  55. தருமலிங்கம் முத்துலிங்கம் (வயது 24 – தொழிலாளி)
  56. தருமலிங்கம் சந்திரன் (வயது 21)
  57. தருமலிங்கம் சாந்தலிங்கம் (வயது 23)
  58. மாரிமுத்து மகேந்திரன் (வயது 18)
  59. மாணிக்கம் பரமசிவன் (வயது 31)
  60. மாணிக்கம் தம்பிராசா (வயது 26 – தொழிலாளி)
  61. மாணிக்கம் செல்வராசா (வயது 27 – தொழிலாளி)
  62. மாணிக்கம் ரவிச்சந்திரன் (வயது 32 – தொழிலாளி)
  63. முத்தையா சத்தியநாதன் (வயது 18)
  64. அந்தோனிப்பிள்ளை மகேந்திரகுமார் (வயது 16)
  65. அழகையா சியாம்சேகர் (வயது 36 – தொழிலாளி)
  66. அருளம்பலம் வாசு (வயது 19)
  67. ஆறுமுகம் இராசரட்ணம் (வயது 20 – தொழிலாளி)
  68. ஆறுமுகம் கணேசமூர்த்தி (வயது 19 – மாணவன்)
  69. ஜோசப் சிறிராமு (வயது 32 – தொழிலாளி)
  70. கோபால் ரமேஸ் (வயது 20)
  71. கோபாலகிருஸ்ணன் பத்மநாதன் (வயது 26 – தொழிலாளி)
  72. கெங்காதரன் ஜெயக்குமார் (வயது 22 – தொழிலாளி)
  73. பொன்னன் மோசன் (வயது 25 – தொழிலாளி)
  74. சோமலிங்கம் விஸ்வலிங்கம் (வயது 42 – தொழிலாளி)
  75. செல்வராசா சுவேந்திரன் (வயது 20 – தொழிலாளி)
  76. செல்லத்துரை கந்தசாமி (வயது 35)
  77. செல்லத்துரை சந்திரன் (வயது 20)
  78. செல்லமுத்து சுப்பிரமணியம் (வயது 18 – தொழிலாளி)
  79. வேலாயுதம் கருணாநிதி (வயது 32 – தொழிலாளி)
  80. ஞானச்செல்வம் உதயகுமார் (வயது 18 – தொழிலாளி)
  81. சந்திரப்பிள்ளை விநாயகமூர்த்தி (வயது 20 – தொழிலாளி)
  82. சுந்தரராகன் தருமலிங்கம் (வயது 21)
  83. சுப்பிரமணியம் இராசு (வயது 20)
  84. சுப்பையா கதிர்காமநாதன் (வயது 22)
  85. சுப்பையா அர்சுனன் (வயது 26)
  86. சுப்பையா ஆறுமுகம் (வயது 39 – தொழிலாளி)
  87. சபாபதி மகேந்திரன் (வயது 26 – வியாபாரி)
  88. சாந்தி சற்குணம் (வயது 40)
  89. சத்தியநாதன் யோகநாதன் (வயது 26 – தொழிலாளி)
  90. சதாசிவம் வேலுப்பிள்ளை (வயது 50 – தொழிலாளி)
  91. சதாசிவம் சிவலிங்கம் (வயது 45 – தொழிலாளி)
  92. சின்னப்பிள்ளை விஜயகுமார் (வயது 20)
  93. சின்னத்துரை பத்மநாதன் (வயது 26)
  94. சின்னத்துரை யோகராசா (வயது 29)
  95. சின்னத்தம்பி நடராசா (வயது 34)
  96. சின்னத்தம்பி சுந்தரம் (வயது 30 – தொழிலாளி)
  97. சின்னத்தம்பி சபானந்தம் (வயது 28 – தொழிலாளி)
  98. சின்னராசா தெய்வேந்திரன் (வயது 23)
  99. சீனித்தம்பி கந்தசாமி (வயது 45)
  100. சீனித்தம்பி சுப்பிரமணியம் (வயது 26 – தொழிலாளி)
  101. வடிவேல் முத்துகுமார் (வயது 17 – தொழிலாளி)
  102. வடிவேல் அழகநாயகம் (வயது 30 – தொழிலாளி)
  103. வடிவேல் தெய்வநாயகம் (வயது 17 – தொழிலாளி)
  104. வடிவேல் சந்திரசேகரராகன் (வயது 42 – தொழிலாளி)
  105. வண்ணமணி மணிவண்ணன் (வயது 20)
  106. வீரன் இராசையா (வயது 35)
  107. வீரன் புஸ்பராசா (வயது 32)
  108. வீரன் செல்வராசா (வயது 29)
  109. ரட்ணம் ஜெயசீலன் (வயது 24)
  110. லலித் துரைராசா (வயது 49 – தொழிலாளி)

குறிப்பு :- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments