விதிகளும் நிபந்தனைகளும்
1)இக்கணக்கை 16 வயது பூர்த்தியடைந்த எவரும் தனியாகவோ அல்லது கூட்டாகவோ அல்லது பலர் சேர்ந்தோ ஆரம்பிக்க முடியும். கூட்டுக் கணக்கு ஆரம்பிப்பவர்கள் கூட்டாகவோ அல்லது அவர்களில் ஒருவரோ கணக்கை நடைமுறைப்படுத்த முடியும். ஆனால் கணக்கினை நடைமுறைப்படுத்தும் முடியும். அறிவுறுத்தல்கள் கணக்கை ஆரம்பிக்கும் போதே தெளிவாக தரப்படும். பின்னர் தரப்படும் அறிவுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இக்கணக்குக்கள் தொடர்ந்து 3 வருடங்கள் நடைமுறைப்படுத்துவதற்கு ஓப்பந்தம் செய்து கொள்ளப்படும். ஓப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட தொகையை மாதந்தோறும் அல்லது காலாண்டு அடிப்படையில் வைப்புச் செய்யலாம்.
2)மாதந்தோறும் வைப்பு செய்வதாக ஒப்பந்தம் சௌ;தவர்கள் தொடர்ந்து 5 மாதங்களும், காலாண்டுக்கு ஒருமுறை வைப்புச் செய்வதாக ஒப்பந்தம் செய்தவர்கள் தொடர்ந்து இரண்டு (2) காலாண்டுக்கும் வைப்புச்செய்யத் தவறும் பட்சத்தில் இக்கணக்கில் உள்ள சகல நன்மைகளையும் இழப்பதுடன், இக்கணக்குகள் சாதாரண சேமிப்புக் கணக்காக கருதப்புடம்.
3) வைப்பாளர்கள் கணக்கை ஆரம்பிக்கும் போதே ஒப்பந்தத் தொகையை தீர்மானித்துக் கொள்ளவேண்டும். மாதந்தோறும் வைப்புச் செய்வதனால் ஆகக் குறைந்தது ரூபா 100 ஆகவும் அதன் பெருக்கங்களாகவும் அமையும் காலாண்டுக்கு ஒரு தடவை வைப்புச் செய்வதாயின் ஆகக்குறைந்த தொகை ரூபா 300 ஆகவும் அதன் பெருக்கங்களாகவும் அமையும்.
4) இம் முதலீட்டு சேமிப்புக் கணக்கிற்கு ஒப்பந்தத்தில் கூறப்பட்டதற்கு இணங்க கவர்ச்சிகரமானவட்டி வழங்கப்படும். காலாண்டுக்கு அடிப்படையில் ஆகக்குறைந்த நிலுவைக்கு வட்டி வழங்கப்படும். வைப்பாளர்கள் ஒப்பந்தத்துக்கு அமைய 36 மாதங்களுக்கு இக்கணக்கில் இருந்து பணம் மீளப்பெற அனுமதிக்கப்படமாட்டாது
5) இம்முதலீட்டு கணக்கு வைப்பாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள நிலுவையில் 85 % க்கு மேற்படாத தொகையை எதுவித பிணையும்; இல்லாமல் கடனாகப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் 1 – 1 ½ மடங்கு வரையான தொகையை வங்கியால் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிணைகளைப் பொறுப்பாக கொடுத்து கடன் பெற்றுக்கொள்ள முடியும்.
6) ஒவ்வொரு வைப்பாளர்களுக்கும் ஒரு சேமிப்புக் கையேட்டுப் புத்தகம் வழங்கப்படும். இப்புத்தகத்தில் ஒவ்வொரு தடவையும் வைப்புச்செய்யும் தொகை பதிந்து கொடுக்கப்படும். வைப்பாளர்கள் வங்கியை விட்டு செல்லு முன்ரே சரிபாத்துக் கொள்ளவேண்டும். வைப்பாளர்கள் இப் புத்தகத்தைத் தொலைத்தால் உடனடியாக வங்கிக்கு அறிவிக்கவேணடும். பூரணமான விசாரணைகனின் பினனர் புதிய சேமிப்புக் கணக்கு புத்தகம் ஒன்று வழங்குவதற்கு ஏற்பாடு செய்யும்.
7) இக் கணக்குகளுக்கு வங்கியின் எந்தக் கிளைகளிலும் பணத்தை வைப்பு செய்யலாம். உரிய கிளையில் உள்ள கணக்கிற்கு மாற்றம் செய்யப்படும்.
8)’வங்கி’ ஒவ்வொரு வருடமும் நடத்தும் வருடாந்த நிகழ்வுகளின் போதும் ஆகக்கூடுதலான வைப்பை வைத்திருக்கும் வைப்பாளர்களுக்கும் குலுக்கல் மூலம் தெரிவு செய்பவர்களுக்கும் விசேட பரிசில்களை வழங்கும்.
கிராமிய அபிவிருத்தி வங்கி முதலீடு சேமிப்பு கணக்கு