×

செஞ்சோலை வளாகப் படுகொலை – (14.08.2006)

14.08.2006 அன்று முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள ‘செஞ்சோலை’ சிறுமிகள் இல்ல வளாகத்தில் சிறிலங்கா வான்படையின் விமானங்கள் திட்டமிட்டு மேற்கொண்ட குண்டு வீச்ச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவச் செல்வங்களின்  நினைவு வணக்க நாள் இன்றாகும்.

ஏனைய மாணவச் செல்வங்களுக்கும், பொதுமக்கள் அனைவருக்கும் எம் கண்ணீர் வணக்கதை காணிக்கை ஆக்குகின்றோம்.

முல்லைத்தீவு வள்ளிபுனம் செஞ்சோலைப் படுகொலை – 14 ஆவணி 2006

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர்பிரிவில் உள்ள வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் 2006 ஆவணி 10ஆம் நாள் முதல் நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான அனர்த்த முகாமைத்துவ முதலுதவிப் பயிற்சி நெறியில் வன்னிப்பிரதேச கிளிநொச்சி, முல்லைத்தீவு கல்வி வலயங்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான உயர்தர வகுப்பு மாணவிகள் பங்குபற்றியிருந்தனர்.

மாணவர்கள் பயிற்சி நெறியில் பங்குபற்றிக்கொண்டிருந்த வேளை இலங்கை வான்படைக்குச் சொந்தமான நான்கு கிபிர் விமானங்கள் செஞ்சோலை வளாகத்தில் 2006 ஆவணி 14 அன்று காலை 7.30 மணியளவில் காலைக் கடன்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவிகள் மீது கண்மூடித்தனமான குண்டுத்தாக்குதலினை மேற்கொண்டன. இக் குண்டுத் தாக்குதலில் 52 மாணவிகள் மற்றும் இரு பணியாளர்கள் உட்பட 54பேர் உயிரிழந்தனர். 130 மாணவிகள் படுகாயமடைந்ததுடன் பல மாணவிகள் சிறு காயங்களுக்குமுள்ளாகினர். படுகாயமடைந்தவர்களில் மூன்று மாணவியர்களுக்கு கால்கள் துண்டக்கப்பட்டதுடன் மாணவி ஒருவர் கண் ஒன்றை இழந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவர்களில் மேலும் காயப்பட்ட மூன்று மாணவிகள் முல்லைத்தீவு வைத்தியசாலையினால் கண்டி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். ஸ்ரீலங்கா பயங்கரவாத
விசாரணைத் திணைக்களம் உடனடியாக காயப்பட்ட மூன்று மாணவிகளையும் கைதுக்குள்ளாக்கினர். இறுதியாக மூன்று மாணவிகளும் விடுவிக்கப்பட்டு வன்னியிலுள்ள தமது வீட்டுக்குச்செல்ல விடுவதற்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டனர். அவர்களுள் காயமடைந்த ஒரு மாணவி வவுனியாவில் இறந்துவிட்டார். மற்றைய இரு மாணவிகளும் உடனடியாக கண்டி வைத்தியசாலைக்கு திரும்ப எடுத்துச் செல்லப்பட்டனர். சில மாதங்களின்பின் இரு மாணவிகளும் எங்கே தங்குகின்றார்கள் என்பதே மர்மமாக மாறியது அவர்களது பெற்றோர்கள் மட்டும் ஏற்கனவே ஒழுங்குபடுத்தப்பட்ட இடத்தில் அவர்களைச் சந்திப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஏறத்தாழ இரு வருடங்களாக எதுவித குற்றச்சாட்டுக்களுமின்றி இந்த இரு மாணவிகளது தடுத்துவைத்தலானது அவர்களது பெற்றோருக்கு விளங்கிக்கொள்ள முடியாததாகவே இருக்கிறது.

செஞ்சோலை வளாகப் குண்டுவீச்சில் உயிரிழந்த மாணவிகளின் விபரம்:

01. முத்தையா இந்திரா
02. முருகையா அருட்செல்வி
03. சிவமூர்த்தி கார்த்திகா
04. சந்தனம் சத்தியகலா
05. கனகலிங்கம் நிருபா
06. கனகலிங்கம் நிருஷா
07. நவரட்ணம் சாந்தகுமாரி
08. நாகலிங்கம் கோகிலா
09. சண்முகராசா கவேந்தினி
10. பாலகிருஸ்ணன் மதினி
11. சிவமயஜெயம் கோகிலா
12. விவேகானந்தம் தட்சாயினி
13. சாந்தகுமார் சுகிர்தா
14. உதயகுமாரன் கௌசிகா
15. நல்லபிள்ளை நிந்துஜா
16. வீரசிங்கம் றாஜிதா
17. தம்பிராசா லக்சியா
18. மகாலிங்கம் வென்சிடியூலா
19. துரைசிங்கம் துதர்சினி
20. குபேந்திரச்செல்வம் லிகிதா
21. வரதராஜா மங்களேஸ்வரி
22. இராசேந்திரச்செல்வம் மகிழ்வதனி
23. நீலாயினார் நிவாகினி
24. தமிழ்வாசன் நிவேதிகா
25. சுந்தரம் அனோஜா
26. புவனசேகரம் புவனேஸ்வரி
27. தேவராசா சர்மினி
28. சிவானந்தராசா திவ்வியா
29. தம்பிமுத்து தயாழினி
30. தம்பிராசா சுகந்தினி
31. சிவசுப்பிரமணியம் வட்சலாமேரி
32. தனபாலசிங்கம் பகீறஜி
33. தணிகாசலம் தனுசா
34. பத்மநாதன் கலைப்பிரியா
35. மார்க்குப்பிள்ளை கெலன் சுதாயினி
36. இராசமோகன் கம்சனா
37. மகாலிங்கம் வசந்தராணி
38. கிரிதரன் டயானி
39.துரைசிங்கம் திசானி
40. வைரமுத்து கிருத்திகா
41. சந்திரமோகன் நிவேதிகா
42. நாகலிங்கம் தீபா
43. தம்பிராசா தீபா
44. திருநாவுக்கரசு நிரஞ்சுலா
45. இரவீந்திரராசா றம்ஜா
46. கணபதிப்பிள்ளை நந்தினி
47. விஜயபவன் சிந்துகா
48. நகுலேஸ்வரன் நிஷாந்தினி
49. தர்மகுலசிங்கம் கேமாலா
50. அருளம்பலம் யசோதினி
51. செல்வம் நிறோஜினி

செஞ்சோலை வளாகப் குண்டுவீச்சில் உயிரிழந்த செஞ்சோலை பணியாளர்களது விபரம்:

01. சந்திரசேகரன் விஜயகுமாரி
02. சொலமொன் சிங்கராசா

செஞ்சோலை வளாகப் குண்டுவீச்சில் காயமடைந்த மாணவிகளின் விபரம்:

01. நாகலிங்கம் உசாந்தினி
02. சதாசிவம் பிரியதர்சினி
03. ரவீந்திரன் பிரியதர்சினி
04. ஆறுமுகம் தயாளினி
05. குலேந்திரன் சுயித்தா
06. நடராசா சிறிவித்தியா
07. சி.மதுசா
08. குணநாதன் ஜசிதேவி
09. சிவனேஸ்வரன் நகுலேஸ்வரி
10. முருகேசு இந்திரவதனா
11. குகனேந்திரன் அஜித்தா
12. வெள்ளிரூபன் துசாந்தினி
13. சுந்தரம்பிள்ளை கஜேந்தினி
14. செல்வானந்தன் ஜான்சி
15. நிர்மலகுமார் நிசாந்தி
16. நடராசா கிந்துஜா
17. மகேந்திரம் சர்மிளா
18. சண்முகராசா தனுசா
19. வெற்றிவேல் சுதர்சினி
20. ரவிதாசன் சிந்துஜா
21. சூரியகுமார் சியாமினி
22. பூபாலசிங்கம் விஜிந்தா
23. முருகன் கௌசி
24. ஞானசேகரம் நிரூஜா
25. மகாலிஙக் ம் கோபிகா
26. புலேந்திரராசா சுதர்சினி
27. நடராசாலிங்கம் கவிதா
28. செல்வநாயகம் அமுதாசினி
29. மகேந்திரராசா நிரூசா
30. கதிரேசன் பிரமிளா
31. புஸ்பவதி
32. ஆறுமுகநாதன் மேகலா
33. கணேசலிங்கம் கோகிலா
34. விஜயசிங்கம் நிதர்சினி
35. றொபேட் யோகராசா துஸ்யந்தி
36. செல்வரத்தினம் சர்மிளா
37. சிவலிங்கம் கமலரூபினி
38. மாணிக்கராசா தயாவிழி
39. சிறிஸ்குமார் வித்தியா
40. இராஜேந்திரம் மீனலோஜினி
41. தங்கவேல் கலைச்செல்வி
42. ஜீவரட்ணம் கிருபாஜினி
43. கலைச்செல்வன் கேமா
44. சின்னராசா சுஜீவா
45. மாணிக்கராசா தயாவிழி
46. மாணிக்கம் கோமதி
47. யோகராசா ரேகாந்தினி
48. பாலசிங்கம் ஜானிகா
49. கந்தசாமி சோபிகா
50. அந்தோனிப்பிள்ளை விஜிதா
51. மாணிக்கம் மேனகா
52. கிட்ணன் சுலோஜினி
53. ஜெயக்கொடி சங்கீதா
54. இரத்தினசிங்கம் மேகலா
55. ஆனந்தராசா மேரிபவிதா
56. கணேசன் ரூபவதனி
57. ஆனந்தராசா டயாணி
58. கணபதிப்பிள்ளை சுஜிவா
59. மகாலிங்கம் யாழினி
60. அரசகுலசிங்கம் லக்சனா
61. நாகராசா தனுசா
62. கணேஸ் ராதிகா
63. திருநாவுக்கரசு நிரஞ்சினி
64. சண்முகலிங்கம் ஜெசினா
65. துரைரத்தினம் சுபத்திரா
66. புஸ்பானந்தி மயில்வாகனம்
67. யாழினி மகாலிங்கம்
68. சிவானந்தம் சிந்துஜா
69. யோகராசா சாளினி
70. உதயகுமார் பிரியா
71. சிவானுப்பிள்ளை சுகந்தினி
72. சபாரட்ணம் சௌமியா
73. நவரத்தினசிங்கம் அனுசியா
74. வேலுப்பிள்ளை தர்சனா
75. பேணாட் பிரபாலினி
76. ஆறுமுகம் உமாமகேஸ்வரி
77. வையாபுரி யுகனாதேவி
78. பொன்னையா துஸ்யந்தி
79. யோகலிங்கம் வேஜினியா
80. யோகராசா பிரபாஜினி
81. இராசேந்திரம் அருள்நாயகதீபா
82. அசோக்சந்திரன் ஜனனி
83. வாமதேவா ஜனனி
84. செல்வராசா சுஜிதா
85. ஆனந்தராசா ரஞ்சிதா
86. சிவராசா சயந்தா
87. கணேசலிங்கம் இந்துஜா
88. தெய்வேந்திரம்பிள்ளை வித்தியா
89. இராசதுரை பிரசன்னா
90. ஆனந்தராசா சுகிர்தா
91. ஜெயக்கொடி கார்த்திகா
92. புவியரசன் நிரூஜா
93. மகேசலிங்கம் செந்துஜா
94. தர்மராசா தயாரூபினி
95. குமாரவேல் மாலினி
96. பாலசிங்கம் சுமித்திரா
97. தமிழ்முத்து தயாளினி
98. நந்தகுமார் சுபா
99. கைலாயப்பிள்ளை கலையரசி
100. சிறி கஸ்த்தூரி
101. தர்மபாலன் தர்சிகா
102. சூரியகுமார் சிந்துஜா
103. சாயினி
104. ராஜேஸ்வரன் சிறிவித்தியா
105. ரவிச்சந்திரன் சாயித்தியா

மூலம்: தமிழினப் படுகொலைகள் 2002 – 2008 நூல்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments