1986.06.12 அன்று ஈச்சிலம்பற்றையிலிருந்து அகதிகளுக்கான உணவுப்பொருட்களை எடுத்துச் செல்லும் போது, மகிந்தபுரவில் ஊர்காவற் படையினரால் இரண்டு கிராமத் தலைவர்கள், மூன்று அரச ஊழியர்கள் மற்றும் இருபது தொழிலாளர்கள் தாக்கப்பட்டார்கள். இத்தாக்குதலில் இருபத்தொரு பேர் உயிரிழந்தார்கள். இரண்டு பேர் காயமடைந்தார்.
இவர்கள் ஈச்சிலம்பாற்றில் இனக்கொலைகளினால் இடம்பெயர்ந்து அகதிகளாகத் தங்கியிருந்தவர்களுக்கான உணவுப்பொருட்களை எடுத்துச் சென்றவர்களாவர்.
மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.