ஆரம்பகாலத்தில் சிங்களம் என்னும் சொல் தென்னிலங்கையில் வசித்து வந்த ஒரு குழுவினரையே குறித்தது என R.A.L.H குணவர்த்தனா குறிப்பிட்டுள்ளார். ஏனைய மற்ற குழுவாக தமிழர்கள் தென்னிலங்கையில் வாழ்ந்திருந்தனர். (அநுராதபுரி) ஆனுர்புரி என்றால் நந்திக்கொடி பறக்கும் நகர் (குடுமியான்மலை கல்வெட்டு. அநுராதபுரத்தில் வாழ்ந்த தமிழர்களே யார் மன்னனாக வரவேண்டும் என்பதனை தீர்மானித்ததாகச் சூளவம்சம் கூறுகிறது. தமிழர்கள் பெரும்பான்மை யாகவும் பலத்துடனும் வாழ்ந்திருந்ததால் அவ்வாறு செய்ய முடிந்துள்ளது. அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட மண்படை ஆராய்ச்சிமுதல் மண்படை கி.மு. 4500 ஆண்டுக்குரிய செயற்கை நீர்த்தேக்கம் இருந்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது. அக்காலத்தில் அங்கே தமிழர் ஆட்சி நிலவியுள்ளது. கி.மு1000 ஆண்டில் அநுராதபுரத்தில் கதம்பநதிக் கரையில் தமிழ் நாகர்களின் தலைநகர் இருந்துள்ளது.
அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (A). அதுமுந்திய அசுரபுரி என்ற தலைநகர் தொடர்ச்சியாக கி.மு 4500 முதல் தமிழர் ஆட்சிஇடம் பெற்றிருந்ததை இது காட்டுகிறது. கிபி 6ம் நூற்றாண்டிற்குரிய அனுராதபுர சைவத் தமிழ் சாசனம்கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து சைவ சமயத்தை வளர்த்துள்ளதைக் காட்டுகின்றது. கிபி 1679ல் றோபேட்நொக்ஸ் என்றஒல்லாந்தபடை அதிகாரிகண்டி அரசனின் சிறையில் 18 வருடம் இருந்து. தப்பி ஓடி வந்த வேளையில், அநுராதபுரத்தில் சிங்களத்தில் அவன் உரையாடியபொழுது அங்கிருந்தவர்களினால் அதைவிளங்கிக்கொள்ளமுடியவில்லை. அவர்கள் சிங்களவர்களிலிருந்து வேறுபட்ட இனத்தவர்களாக காணப்பட்டார்கள். அவர்களின் தாய் மொழியாக தமிழ்மொழி இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். எனவே 17ம் நூறாறானடில் அனுராதபுரியில் தமிழ் மக்களே வாழ்ந்துள்ளனர். 18ம் 19ம் நூற்றாண்டில் குலசேகரம். வைரமுத்து வன்னி அரசர்களால் நுவரகலாவிய என்ற அநுராதபுர பிரதேசம் ஆட்சி செய்யப்பட்டது.
சத்தாதீசனின் தமிழ்க் கல்வெட்டு பொன்னன் வெளியில் காணப்பட்ட தீர்த்தக்குளம் திகவாபி ஆக மாற்றப்பட்டுள்ளது. பட்டிப்பளை ஆறு கல்லோயா ஆகமாற்றப்பட்டு. சிங்களக் குடியேற்றத் திட்டம் உருவாக்கப்பட்ட போது, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு பகுதியைப் பிரித்து அம்பாறை மாவட்டம் என பெயரிடப்பட்டது. தமிழில் வாவி என்னும் சொல்லே சிங்களத்தில் வாபி என்றும், வேவ என்றும் அழைக்கப் படுகிறது. இது நடுக்காடுப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ளது. இங்கு தொன்று தொட்டு தமிழர்களே விவசாயம் செய்து வந்தனர். 1952ல் நிகழ்ந்த பெளத்த, முஸ்லிம் கலவரத்தினால் தமிழர்களும் வெளியேற நேர்ந்தது. கொண்ட வெட்டுவானில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்குரிய தமிழ்ப்பிராமிக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டள்ளது.
துட்டகாமினி தம்பியான சத்ததீசனால் தமிழில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு இதுவாகும். துட்ட கைமுனுவும். சத்ததீசனும் தமிழர்கள் என்பது இதனால் தெரிகின்றது. கலிங்கர் வருகை இந்தியாவில் குப்தவம்ச அரசன் காலமான கி.பி. ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளில் பெளத்தர்கள் கொல்லப்பட்டார்கள், சித்திரவதை செய்யப்பட்டார்கள், கொடுமை. குரூரங்களுக்கு ஆளாக்கப்பட்டு மிலேச்சத்தனமாக ஆங்காங்கே பழிவாங்கப்பட்டபோது. உயிருக்கு அஞ்சி. பல்லாயிரக்கணக்கான பெளத்தர்கள் வட இந்தியாவிலிருந்து தெற்கே தப்பி வந்தனர். பீகார், ஒரிசா வங்காளம் ஆகிய இடங்களைச் சேர்ந்த பெளத்தர்கள் பயந்து, கலவரமடைந்து ஒழிந்து. உயிரைக் காப்பாற்றி இலங்கையில் வந்து குடியேறினர் என்று ம.க. அந்தனிசில் (13.12.1998 வீரகேசரி) தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் வடக்கிலும், கிழக்கிலும் வாழ்ந்த தமிழ்ப் பெளத்தர்களின் வரலாற்றை இருட்டடிப்புச் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மகாவம்சத்தை எழுதிய மாநாம தேரரும் அப்பொழுது தப்பிவந்த ஒருவரே. அவர்களுக்கு இந்தியாவில் இழைக்கப்பட்ட கொடுமையான. குரூரமான சித்திரவதைகளின் வேதனைகள் அவர்களின் மனதில் உறைந்து போய்விட்டது. முதலில் இக்காலத்தில் தான் பெளத்தர்கள் கதியற்றவர்களாக ஒளிவுமறைவாக வந்து களவாகக் குடியேறினார்கள். அதனால் தானோ என்னவோ மாநாமரின் எழுத்துக்களிலும் கொடுமையான குரூரமான சிந்தனைகள் இழையோடிக் காணப்படுகிறது.
மீண்டும் கி.பி. 10ம், 11ம். 12ம் நூற்றாண்டுகளில் இஸ்லாமியர்கள் படை எடுத்து வந்து கலிங்கம், மகதம், வங்காளத்தில் பெளத்தத்தை பெருமளவில் சிதைத்தனர். பெளத்த மடாலயங்களும் அழித்து நிர்மூலமாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பெளத்த குருமார்கள் அவர்களது மடாலயங்களில் வைத்துக் கொலை செய்யப்பட்டார்கள். பலர் உயிருடன் எரிக்கப்பட்டார்கள். பெளத்தப் பள்ளிகள் சூறையாடப்பட்டன. பீகார் ஆயிரமாண்டுகளுக்கு மேலாக பெளத்தமதக் கல்வியையும் பெளத்த கலாசாரத்தினையும் போதித்து வந்ததாகும், ஒரேசமயத்தில் 40000 மாணவர்களைக் கொண்டிருந்த உலகின் மிகப்பெரிய நாலந்தா பல்கலைக்கழகம் 197ல் முஸ்லிம்களினால் அழிக்கப்பட்டது. விலைமதிக்க முடியாத இலக்கிய செல்வங்களான நூல்களும் அழிக்கப்பட்டன. உலகத்திற்கு பேரிழப்பாகும் என டாக்டர் எஸ் தியாகராசா (வீரகேசரி 24.8.05) தெரிவித்துள்ளார். முஸ்லிம்களின் கொடுமை கொலை குரூரங்களைத் தாங்க முடியாத நிலையில் உயிரைக்காப்பாற்றி கொள்வதற்காக கலிங்கத்தினிலிருந்து பெளத்த குருமார்கள். கலிங்க அரசர்கள். அரச வம்சத்தவர்கள் எல்லாவற்றையும் இழந்து உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு களவாக தோணிகளில் இலங்கைக்கு வந்து சேர்ந்தனர். இது இரண்டாம் வருகையாகும். ஏற்கனவே தப்பிவந்தவர்கள் இங்கு பாதுகாப்பாக வாழ்ந்ததால், அவர்களும் கதியற்றவர்களாக இங்கு வந்தனர். இங்குள்ள பெளத்த பிக்குமாரும் பெளத்தர்களுமாக வந்தேறுகுடிகளை ஆதரித்தனர்.
இலங்கையர் பலர் இருந்தபோதும் பெளத்த குருமார் பெளத்தமத வளர்ச்சிக்காகவே இந்தியாவிலிருந்து வந்த கலிங்கர்களை தென் இலங்கையில் அரசராக்கினர். மேலும் கலிங்கர்களான பெளத்த குருமார். தமது பாதுகாப்பிற்காகவும் கலிங்கர்கள் அரசராவது நல்லது என எண்ணியே அவ்வாறு செய்தனர். தென்னிலங்கையில் சிங்கள அரசவம்சம் ஒன்று இல்லாதகாரணத்தினால் அந்நிய நாட்டவரான கலிங்கர்கள் அரசர் ஆக வரமுடிந்துள்ளது. தென்னிலங்கையில் சோழர், பாண்டியர் ஆட்சிக் காலங்களில் (10-12 நூற்றாண்டு கலிங்கர்களும், மகதர்களும் இலங்கைக்கு வந்தனர். கலிங்க மன்னர்களின் விபரம். மகிந்தன் 956 – 972 ஆண்டு வரை விஜயபாகு கி.பி.1055 – 1110 ஆண்டு வரை விக்கிரமபாகு கி.பி 16 – 1137 ஆண்டு வரை நிசங்கமல்ல கி.பி 1187 – 1196 ஆண்டு வரை விக்கிரமபாகு 1196 – 12OO தென்னிலங்கையில் ஆட்சிசெய்தனர். மேலும் கல்யாணவதி வீரபாகு, சோடகங்கன் ஆகியோர் படையெடுப்பின் காரணமாக வந்தனர். இதனால் கலிங்கப் பெயர்களான நிசங்க, விஜய, மகிந்த, விக்கிரம, திரிலோக சுந்தரி, லீலாவதி. சுந்தரி ஆகிய பெயர்கள் சிங்களவர் மத்தியில் நிலை கொண்டுள்ளன. கலிங்கர்கள் இந்திய திராவிட இனத்தவர் ஆவர். கி.பி. 956ல் வந்த கலிங்க இளவரசன் மகிந்தன் பெளத்த சமயத்தை இங்கு பரப்பினான். கி.பி.1055ல் வந்த விஜய என்ற கலிங்க மன்னன் இங்கு அரசனானான். விஜய மகதத்திலிருந்து வந்தவன் என்றும் வேறு கருத்து உண்டு.
சிங்களவர் என்று பூரண அடையாளம் பெறத் தொடங்கியது கி.பி.1200 அளவில் தான் என்று பேராசிரியர் இந்திரபாலா தெரிவித்துள்ளார். அழகேசுவரனின் அழகேசுவரன் கோட்டை என்பது கோட்டை இராசதானியாகும். கம்பளை மன்னன் விக்கிரமபாகுவின் இனத்தவனும், கம்பளை அரசில் படைத்தலைவனாகவும், மந்திரியாகவும் இருந்தவனுமான அழகக்கோன் அல்லது அழகேசுவரன் என்பனை மன்னனாக்குவதற்காக கி.பி 1406) கோட்டை ராச்சியம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து செண்பகப்பெருமாள் போன்ற அரசர்களல் ஆட்சிசெய்யப்பட்டு வந்தது. சுனித்திராதேவி தமிழரசி மருமகள் தமிழரசி, பேத்தி தமிழரசி என்று தமிழர்களின் ஆட்சியிலிருந்த காரணத்தினால் கோட்டை இராசதானியில் தமிழ் அரச மொழியாக இருந்துள்ளது. H.W. கொட்றிங்ரன்”சிலோன் என்றநூலில் கோட்டை அரசினை ஆண்டமன்னர்களது அரசமொழியாக தமிழ் மொழியே இருந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். அழகக்கோன் முதலாக தருமபாலன் வரை கோட்டையை ஆண்ட மன்னர்கள் எல்லோரும் தமிழர்களே.
அழகக்கோன்கோட்டை அமைந்த இடம் ஜெயவர்த்தன புரமாகும். இலங்கையில் அகழ்வாராச்சிகளில் தென்கரை வளவகங்கை பகுதி, கிழக்குக் கரை கதிரவெளி, மேற்குக்கரை பொன்பரிப்பு மாதோட்டம் மாந்தை, வடக்குக்கரை வல்லிபுரம், மத்திய இலங்கையின் வவுனியா. அநுராதபுரம், முதலிய இடங்களில்தமிழர்களின் ஈமச்சின்னங்களாகிய முதுமக்கட்தாழிகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. கோட்டகம சங்கிலிக்கான தரவை. பாண்டுவாசநகர். மாத்தளை, கந்தப்பளை, புதுமட்டவாவி, முதலிய தென்னிலங்கை ஊர்களில் பழைய தமிழ் கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மற்றும் வரலாற்றுக்காலத்திற்கு முற்பட்ட சிவாலய இருப்பிடங்களையும். அவற்றின் பின்னைய வரலாற்றினையும் ஆராயு மிடத்து இந்நாடு தமிழ் இலங்கையான சிவபூமியே என்று தி.க.இராசேசுவரன் (5ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மலர்) தெரிவித்துள்ளார். கி.பி. 13ம் – நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வீரசோழியம் என்ற தமிழ் இலக்கணநூல் இந்திய தமிழ் பெளத்த பிக்கு மூலம் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டு சித்தசங்கராவ என்ற பெயரில் சிங்களமொழி இலக்கணமாக உள்ளது தமிழ் வைத்திய சிந்தாமணி என்ற நூலை செயசிங்கம் என்ற தமிழ் வைத்தியர் சிங்களத்தில் மொழிபெயர்த்து சிங்கள வைத்திய நூலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆதாரம் #பல்லவராச்சியம்
வேள் நாகன்