×

அக வணக்கம் செய்தோம் வீரர்களே

அக வணக்கம் செய்தோம் வீரர்களே
ஆயிரம் ஆயிரம் தீபங்களால்

அக வணக்கம் செய்தோம் வீரர்களே
ஆயிரம் ஆயிரம் தீபங்களால்

கண்ணுக்குள் வாழ்கின்ற மாவீரர் தோழரை
உரிமையின் வேரில் வைத்து அரவணைத்தோம்
காலத்தை ஆழ்கின்ற காவியச் சீலரை
உயிருக்குள் வைத்துத்தானே அன்பரைத்தோம்

அக வணக்கம் செய்தோம் வீரர்களே
ஆயிரம் ஆயிரம் தீபங்களால்

விழு தறிந்தாடிய மாவீர பாதங்கள்
விழிகளின் கனவுக்குள் மெய் சிலீர்க்கும்
விண்ணையும் தாண்டிய தேசிய வேதங்கள்
வீரத்தின் களத்தினில் தீக்குளிக்கும்

கார்திகை விழிகள் ஒளிதரும் வீச்சிலே
தாயகக் கனவுகள் தடை தகர்க்கும்
கால் பட்ட மண்ணிலே மாவீரர் மூச்சிலே
தமிழரின் தேசம் தலை நிமிர்க்கும்

அக வணக்கம் செய்தோம் வீரர்களே
ஆயிரம் ஆயிரம் தீபங்களால்

அக வணக்கம் செய்தோம் வீரர்களே

சூரிய தேவனின் பார்வையின விPழுதாய்
திசைகளில் ஆடிய இடி முழக்கம்
சூழ்ந்திடும் இருளை விளக்கிடும் பொழுதாய்
மாவீரர் ஆகங்கள் இசையமைக்கும்
மானத்தை காத்த மாவீரர் ஈகம்
காலத்தை கடந்தும் உயிர்பிருக்கும்
மரணத்தை வென்ற கர்மத்தின் மொழிகள்
மாவீரர் என்று பெயர் எடுக்கும்

அக வணக்கம் செய்தோம் வீரர்களே
ஆயிரம் ஆயிரம் தீபங்களால்

அக வணக்கம் செய்தோம் வீரர்களே
ஆயிரம் ஆயிரம் தீபங்களால்

கண்ணுக்குள் வாழ்கின்ற மாவீரர் தோழரை
உரிமையின் வேரில் வைத்து அரவணைத்தோம்
காலத்தை ஆழ்கின்ற காவியச் சீலரை
உயிருக்குள் வைத்துத்தானே அன்பரைத்தோம்

அக வணக்கம் செய்தோம் வீரர்களே
ஆயிரம் ஆயிரம் தீபங்களால்

அக வணக்கம் PDF FILE HERE