
“மைக்கேல் வசந்தி’ என்ற இயற்பெயருடைய, யாழ் மாவட்டத்தில் வடமராட்சி, நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட மாணவியாவார். 1984 இல் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டதோடு முதலாவது பயிற்சிமுகாமிற் பயிற்சி பெற்று தாயகம் திரும்பினார். புலிகளின் படையணியில் மருத்துவப்போராளியாகவும் தளபதியாகவுமிருந்தார்.
மன்னாரில் லெப்.கேணல். விக்டர் தலைமையில் நடைபெற்ற பெண் புலிகளின் முதலாவது தாக்குதல் தொடக்கம் இந்திய இராணுவத்திற்கெதிரான தாக்குதல்கள் வரை இவர் பல களங்களைக் கண்டவர்.
மணலாற்றுக் காட்டுக்குள் இருந்த காலத்தில் ஒரு நத்தார் தினத்தன்று சுகவீனமுற்றார். பின் 11.01.1990 அன்று சாவடைந்தார்.
இவரின் பெயரில் ‘சோதியா படையணி’ என்ற பெண்கள் படையணி 14.07.1996 அன்று உருவாக்கப்பட்டது. அதன் பின்னான அனைத்துக் களங்களிலும் அது சிறப்புறச் செயலாற்றியது. இன்று வரை ஏறத்தாள ஐந்நூறு போராளிகளை இப்படையணி இழந்துள்ளது.
தமிழீழப் போராட்ட வரலாற்றில் மேஜர் சோதியாவினது ஆளுமையும், திறமையும் இன்று வரையான மகளிர் படையணியின் வளர்ச்சிக்கான அச்சாணி.