புலிகள் குரல் ஊடகத்தின் பொறுப்பாளரான ஜவான் அவர்கள் தமிழீழத்தின் நிகழ்வுகளையும் உலகச் செய்திகளையும் மக்களுக்கு ஒளிபரப்பும்தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோக பூர்வமான புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்பு சேவையை திறம்பட வழிநடத்தியிருந்தார். சிறீலங்கா அரச படைகளிடமிருந்து தொடர்ச்சியான இலக்கு வைக்கப்பட்ட வான்வழி மற்றும் தரைத் தாக்குதல்களுக்கு உட்பட்டிருந்தாலும்இ தாக்குதல்களுக்குப் பிறகு உடனடியாக அவர்களின் ஒளிபரப்பு சேவைகளைத் தொடர்ந்தததோடு. புலிகளின் குரல் ஒளிபரப்பின் தொடர்ச்சியானது 2009 ஆம் ஆண்டின் இறுதிக் கட்டம் வரை இடையறாது தொடரப்பட்டது. எனவே எவ்விடர் ஏற்பட்ட போதிலும் தனது சேவையைத் தொடர்ந்ததோடு மக்களுக்கு தகவல்களை வழங்கியதோடு, மனவலிமையையும் துணிவையும் தக்க வைக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டிருந்தது. ஒவ்வொரு தாக்குதலையும் தொடர்ந்துஇ ” குண்டு நம்மீது விழுந்தால் என்ன” என்ற பாடல் கேட்பவர்களுக்கு எந்தவிதமான தடைகளையும் மீறி தொடர்ந்து செல்ல புத்துயிர் அளிக்க ஒளிபரப்பப்பட்டதோடு தமிழ்மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்பாட்டிலும் ஈடுபட்டார்.