இலங்கையின் மத்திய காலத் தலைநகரில் பொ.ஆ 11 ஆம் நூற்றாண்டில் இராஜேந்திரச் சோழனால் அமைக்கப்பட்ட சிவாலயம். இதற்கு தன் தாயின் பெயரில் வானவன்மாதேவி ஈஸ்வரம் எனப் பெயரிட்டு இங்கு தனது கல்வெட்டையும் இராஜேந்திரன் பொறித்துள்ளான். இவ்வாலயத்தில் மொத்தமாக ஆறு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
இது இரண்டாம் சிவாலயம் என அழைக்கப்படுகிறது. இதன் கருவறையும், நந்தியும் மட்டுமே பாதுகாக்கப் பட்டுள்ளன.
பொலநறுவை பழைய நகரம் – பொலநறுவை மாவட்டம், இலங்கை.
Siva Temple ( 2nd ) – Polonnnaruwa Old City – Polonnaruwa District, Srilanka.
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை.