×

தம்பலகாமம் படுகொலை – 20.06.1986

திருகோணமலை மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற கிராமங்களில் ஒன்றாக தம்பலகாமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் பிரதான தொழிலாக விவசாயம் அமைந்துள்ளது.

1986.06.20 அன்று தம்பலகாமம் சந்தியிலிருந்த விமானப் படையினரும்,  இராணுவத்தினரும் இணைந்து அக்கிராமத்தில் மேற்கொண்ட தாக்குதலினால் மக்கள் தமது வீடுகளை விட்டு இடம் பெயர்ந்து வேறிடங்களுக்குச் சென்றனர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களில் இருபத்தைந்திற்கும் மேற்பட்டவர்கள் பொற்கேணி அரிசி ஆலையில் (L.R.S Mill) தஞ்சமடைந்தனர்.

இந்தவேளையில் அங்குவந்த இராணுவத்தினர் அனைவரையும் கைது செய்து கொண்டு சென்றனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் உள்பந்தை கிராமத்தின் சமுனை ஆறு என்னும் இடத்தில் வைத்துச் சுட்டதில் அனைவருமே உயிரிழந்தார்கள்.

20.06.1986 அன்று தம்பலகாமம் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:

  1. கந்தசாமி கனகசபாபதி
  2. கனகசபாபதி புவனேஸ்வரி
  3. கனகசபாபதி தாசன்
  4. கனகசபாபதி தீபன்
  5. கனகசபாபதி தீசன்
  6. கனகசபாபதி ரஞ்சி
  7. கணபதிப்பிள்ளை சபநாயகம் (வயது 51 – தொழிலாளி)
  8. கணபதிப்பிள்ளை சிதம்பரநாதன் (வியாபாரம்)
  9. முனியையா லெட்சுமி (வயது 37)
  10. சேகர் கந்தமுத்து
  11. சேகர் கணபதிப்பிள்ளை
  12. சேகர் வனிதா
  13. சேகர் ராதிகா
  14. சுப்பிரமணியம் ஜெயானந்
  15. சுப்பிரமணியம் ஜெயராணி
  16. சுப்பிரமணியம் செல்வராணி
  17. சுப்பிரமணியம் சுதாகரன்
  18. சுப்பிரமணியம் சசீகரன்
  19. சுப்பையா சாந்தகுமார் (வியாபாரம்)

குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments