திருக்குறள்
தெய்வப்புலவர், பொய்யாமொழிப் புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உள்ளன. இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளுக்குள் வருகின்றன.
காமத்துப்பால்/ இன்பத்துப்பால்
முப்பாலில் இறுதியாக வரும் காமத்துப்பால் அல்லது இன்பத்துப்பாலில் மொத்தம் இரண்டு இயல்கள் உள்ளன. ஒன்று களவியல் மற்றொன்று கற்பியல். இதில் களவியலில் 7 அதிகாரங்கள் உள்ளன. கற்பியலில் 18 அதிகாரங்கள் உள்ளன. ஆக காமத்துப்பாலில் மொத்தம் 25 அதிகாரங்களும் 250 பாடல்களும் உள்ளன.
களவியல் – 7
கற்பியல் – 18
மொத்தம் 9 இயல்கள், 133 அதிகாரங்கள், 1330 பாடல்கள் திருக்குறளில் உள்ளன