×

உலகில் இன்று பயன்பாட்டிலுள்ள மொழிகளில் 40 விழுக்காடுவரையான மொழிகள்.

உலகில் இன்று பயன்பாட்டிலுள்ள மொழிகளில் 40 விழுக்காடுவரையான மொழிகள் அடுத்த 50 ஆண்டுகளுக்குள் அழிந்துவிடும்- ஆய்வு முடிவு. ஆண்டு ஒன்றிற்கு ஏறத்தாழ 36 மொழிகள் அழிவுற்றுவருவதாக ஐ.நா வினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. ஏற்கனவே தமிழ், சீன மொழி (Mandarin) தவிர்ந்த ஏனைய செம்மொழிகள் எல்லாமே பொதுப் பயன்பாட்டிலிருந்து அழிந்துவிட்டன. இவ்வாறு அழிந்துவரும் மொழிகளைப் பாதுகாப்பதற்காக கூகுளின் உதவியுடன் ஒரு செயற்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது- The Endangered Languages Project. (இத் திட்டம் தொடர்பான விளக்கம் கருத்துப்பகுதியில் (Comments)இணைக்கப்பட்டுள்ளது.)

இலங்கையில் இந்தக் கேட்டினை சந்திக்கவுள்ள மொழிகள்.
1. இலங்கை மலாய்= Srilankan Malay
2.இலங்கை அடையாள மொழி= Srilankan sign language
3. வேட மொழி= Veddah
இவையெல்லாம் சிங்களமொழியில் உள்வாங்கப்பட்டு அழியும் நிலையின் இறுதிக்கட்டத்திலுள்ளது.

தமிழ்:::
தமிழைப் பொறுத்தவரையில் உடனடி இன்னல்கள் இப்போது இல்லாவிடினும் பிறமொழிக் கலப்பானது 25% -30% வரையுள்ளதால் எதிர்காலம் குறித்துக் கவனமாகவிருக்கவேண்டியுள்ளது. குறிப்பாக புலம்பெயர் தமிழ்ச் சமூகமானது எவ்வாறு தமது மூன்றாம், நான்காம் தலைமுறைகளிற்குத் தமிழைக் கடத்தப்போகிறார்கள் என்பது கவனத்திற்கொள்ளப்படவேண்டும். இங்கு பிறந்த தமிழ்ப் பிள்ளைகள் வீட்டிலே தமது உடன்பிறப்புக்களுடன் தமிழில் உரையாடமல் அந்த நாட்டு மொழியில் உரையாடுவது கவலைக்குரியவிடயமாகும்.

இலங்கநாதன் குகநாதன்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments