×

ஊர் நோக்கி – அக்கராயன்

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள இயற்கை எழில் நிறைந்த ஒரு பிரதேசம். அக்கராயன் கோணாவில் யுனியன்குளம் கந்தபுரம் போன்ற பிரதேசங்களை எல்லையாகக் கொண்டு விளங்கும் பிரதேசம் அக்கராயன். சோழ மன்னர்களின் ஆளுமைக்கு உட்பட்ட கிராமங்கள், குறிச்சிகள் ராயன் என்னும் முடிவுப் பெயரில் அமைந்திருப்பதைக் காணலாம்.

உதாரணமாக பல்லவராயன், கனகராயன், அக்கராயன் இப்படி வரும் பெயர்கள் இதன் வழிவந்த பெயர்களாகும். அக்கிராயன் என்னும் சிற்றரசன் இந்த பிரதேசத்தை ஆட்சி செய்து வந்துள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் இருந்து புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மலேசிய சிலோன் உடன் படிக்கையில் சுமார் எழுபதைந்து குடும்பங்கள் இப்பகுதியில் குடியேறினர். பல புராதன தொடர்புகளை கொண்ட அக்கராயன் பல யுத்த வடுக்களையும் சுமந்துகொண்டுள்ளது. போர்க்காலத்தில் பல தியாகத்தை செய்த அக்கராயன் இடம்பெயர்ந்த மக்களின் புகழிடமாகவும் வாழ்விடமாகவும்  இருந்தது .

அக்கராயன் என்பவர் இலங்கையின் யாழ்ப்பாண அரசின் தெற்கு பகுதியாக விளங்கிய வன்னி நிலப்பரப்பை  ஆண்ட ஆட்சியாளர் ஆவார். இவர் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ஆவார். இங்குள்ள அக்கராயன் குளம் இவரால் உருவாக்கப்பட்டது ஆகும். 2018 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் அக்கராயன் சிலை நிறுவப்பட்டது. அக்கராயன் ஆறு இவர் பெயரிலேயே வழங்கப்படுகிறது. இவ்வாறு  பல புராதன மற்றும் இயற்கை சிறப்பியல்புகளை கொண்ட அக்கராயன் ஈழ விடுதலை போராட காலத்தில் வீழ்த்தப்படாத தாயக பகுதியாக இறுதிவரை இருந்தது. ஈழப் போராட்டத்தில் தனது தியாகத்திலும் உயர்ந்து நிற்க்கிறது அக்கராயன்.

வட்டக்கச்சி

வினோத்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments