×

வீரன் அழகுமுத்துக்கோன்

வீரன் அழகுமுத்துக்கோன், பிரிட்டிஷ் அதிகாரத்திற்கு எதிராக மக்கள் உணர்வைத் தட்டி எழுப்பிய தொடக்க கால விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். திருநெல்வேலி பகுதியில் எட்டையபுரம் பாளையக்காரர்களின் தளபதிகளில் ஒருவராக விளங்கினார்.

புகழ் வாய்ந்த படைத்தளபதியான கான்சாகிப் எட்டையபுரம் பாளையக்காரரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, குருமலைத்துரை நாயக்கரைப் புதிய பாளையக்காரராக நியமித்தான்.

வீரன் அழகுமுத்துக்கோன் படை ஒன்றை திரட்டிக் கொண்டு எட்டையபுரம் விரைந்தார்.  பெத்தநாயக்கனூரில் நடைபெற்ற போரில் பிரிட்டிஷ் படை வெற்றி பெற்று கோட்டையைக் கைப்பற்றிக்கொண்டது. அரச குடும்பத்தவருடன் அழகுமுத்து தப்பிச் சென்றார். ஆனால், பிரிட்ஷ் படை அழகுமுத்துக்கோன் மற்றும் ஏழு தளபதிகள் உட்பட 258 பேரைப் பிடித்தது. சிப்பாய்களின் வலக்கரங்களை வெட்டி முடமாக்கினார். அழகுமுத்துக் கோன், ஒரு பீரங்கியின் வாயில் வைத்துக் கட்டிச் சுடப்பட்டு, உடல் சிதறடிக்கப்பட்டார்(1757)

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments