
கேணல் கிட்டு வீரப்பிறப்பு 16.01.1993 – வீரச்சாவு 16.01.2024
வங்க கடலில் காவியமான தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு எனப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 10 மாவீர்களின் நினைவு வணக்க நாள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின், ஆரம்பகால உறுப்பினரான, கேணல் கிட்டு, 1985இல் யாழ்ப்பாண மாவட்ட தளபதியாக பொறுப்பேற்று, இரண்டு ஆண்டுகள் அந்தப் பொறுப்பை வகித்திருந்தார். சதிமுயற்சி ஒன்றில் காலை இழந்த அவர், இந்தியப் படைகள் நிலைகொண்டிருந்த காலத்தில், தாயகத்தில் இருந்து வெளியேறி, அனைத்துலக செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.
1993ஆம் ஆண்டு இதே நாளில், குவேக்கர்ஸ் அமைப்பின் அமைதி திட்டத்துடன், கப்பல் மூலம் தாயகம் திரும்பிக் கொண்டிருந்த போது, கேணல் கிட்டு உள்ளிட்டவர்கள் பயணம் செய்த கப்பலை வங்கக் கடலில் இந்தியக் கடற்படையினர் சுற்றிவளைத்த நிலையில், கப்பலை வெடிக்க வைத்து வீரச்சாவைத் தழுவினார்கள்.
ஆகிய மாவீர்களே அன்றைய நாளில் வீரச்சாவை தழுவினர்.
பிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு..
ஒரு காலை இழந்தபின்பும் சாதிக்க முடியும் என்பதை காட்டிய கிட்டண்ணா.