
நல்ல தலைமைக்கு அழகு தன்னொழுக்கம்
நல்ல தலைமைக்கு அழகு நேர்மைத்திறம்
நல்ல தலைமைக்கு அழகு அசைவிலா ஊக்கம்
நல்ல தலைமைக்கு அழகு நெஞ்சுரம்
நல்ல தலைமைக்கு அழகு சீரிய வழிகாட்டல்
நல்ல தலைமைக்கு அழகு கடமை கண்ணியம் கட்டுப்பாடு
நல்ல தலைமைக்கு அழகு எதிரியைக் கூட பழித்துரையாமை
நல்ல தலைமைக்கு அழகு திட்டமிட்ட அறிவார்ந்த செயற்பாடு
நல்ல தலைமைக்கு அழகு முன்னெடுத்துக்காட்டு
நல்ல தலைமைக்கு அழகு அறத்தின்படி நிற்றல்
நல்ல தலைமைக்கு அழகு மக்களுக்கான வாழ்வும் ஈகமும்
நல்ல தலைமைக்குப் பேரழகு செயற்கரிய செய்தல்
நல்ல தலைமைக்குப் பேரழகு இவர்போல யாரென்று வரலாறு சொல்ல வாழ்தல்…
இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாய்ப் பெற்றுள்ள தலைவரை வாழ்த்துகின்றோம்…
நீங்கள் இருக்கும் திசை நோக்கி வணங்குகின்றோம்…