×

சூழல் எனும்போது நாம் வாழும் சுற்றாடலைத்தான் குறிப்பிடுகிறோம்.

சூழல் எனும்போது நாம் வாழும் சுற்றாடலைத்தான் குறிப்பிடுகிறோம். எமக்குப் புறம்பாக அச்சூழலிலுள்ள எல்லா உயிரினங்களும் அதுபோலவே உயிரற்ற அம்சங்களாக எமது வாழ்க்கையோடிணைந்து காணப்படுபவையெல்லாம் சூழல் என்னும் பதத்தினுள்ளடங்கும். இயற்கையின் கூறுகளாக நாம் கருதுகின்ற மண், நீர், மரம், செடிகொடிகளும் விலங்கினங்களும, நாம் சுவாசிக்கும் காற்றும் எமது சூழலின் பகுதிகளே. அதேபோல செயற்கைக் கூறுகளாக நாங்கள் அமைத்துக்கொண்டு வாழும் இல்லங்கள், தெருக்கள்,கட்டமைப்புக்கள் போன்ற உயிரற்ற பொருட்களும் எமது சூழலின் கூறுகளாகின்றன. இவ்வியற்கைக் கூறுகளோடு இசைவான வகையில் ஆதிமனிதன் வாழ்ந்து தன்மட்டான தேவைகளை மட்டுமே பெற்றுவந்தான்.

இந்நிலையிலிருந்து விலகி இன்றைய மனிதன் தன்னை இயற்கையிலிருந்து புறம்பாக்கிப் பார்க்கும் தன்மையோடு தனது தேவைகளை முதன்மைப்படுத்தி கட்டுப்பாடற்ற நுகர்வுக்கேற்ற வகையில் தனது சூழலை மாற்றிவருகின்றான். அறிவியலும்,தொழில்நுட்ப வளர்ச்சியும் ஏற்படுத்திக்கொடுத்த பல்வேறு புதிய வாய்ப்புக்களோடு சேர்ந்தே சூழல் மேல் வந்த பாதிப்புக்களும்  வந்துசேர்ந்துள்ளன. இயற்கையின் சிதைவெனவும் சூழலின் மாசடைவும் அழிவெனவும் பலமட்டங்களில் பேசப்படும் மாற்றங்களெல்லாம் நவீனயுகம் தந்த அதிவே வளர்ச்சியின் விளைவுகள்தான் என்பது தெளிவாகியபின் மேற்குலகம் வழி நடத்திவந்த இவ் வளர்ச்சிப்பாதை கேள்விக் குள்ளாக்கப்பட்டு 1992இல் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சூழல் மாநாட்டுப் பிரகடனங்களின் உந்துதலின்படி ஷஷபேணத்தகுமேம்பாடு|| (Sustainable Development)

என்ற பெயரில் இயற்கையையும் ஒரே நேரத்தில் இணைத்து நோக்கும் அபிவிருத்தி பற்றிய புதிய விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இம்முயற்சிகளை சூழல் தொடர்பான அமைப்புக்களும் பசுமை இயக்கங்களும் மக்களிடையே தோன்றிய தன்னார்வக் குழுக்களும் பல நாடுகளில் தீவிரமாக இயக்கிவருகின்றன. வளர்ச்சிப் பாதையில் ஏற்கனவே முன்னேறிவிட்ட பெரும் தேசங்களிற்கூட பதுமைவாய்ந்த சூழல்பற்றிய கருத்தாக்கம் சிறிது சிறிதாகவே உள்வாங்கப்படும். இவ்வேளையில், பல எதிர்ப்புக்களின் மத்தியில் விடுதலை பெற்று வெளிவரக் காத்திருக்கும் ஒரு சிறிய தேசிய இனம் தன் இயற்கை வளங்களைப் பேணுவதற்குரிய வாய்ப்புக்கள் எவை? இவற்றை எவ்வாறு நடைமுறைப் படுத்தலாம்? இங்கேதான் எமக்கெனவே கிடைத்துள்ள அரிய புதிய வாய்ப்புகள் முன்னிலைக்கு வருகின்றன. இவற்றுள் முக்கியமான வாய்ப்பென்பது நீண்டதோர் யுத்த சூழ்நிலையின் பின் நாம் விடிவு பெறும்போது எமது எதிர்காலத்தை நாமே நிர்ணயித்து கொள்ளமுடியும்.

தமிழீழ மண்ணில் சூழல் நல்லாட்சிக்கெனவோர் ஆணையம்

தமிழீழ மண்ணில் சூழல் நல்லாட்சிக்கெனவோர் ஆணையம் 2

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments