×

ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர்

ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் ஃபிரான்ஸுவா குரோ ( Francois Gros ) மறைந்தார்

1960களின் ஆரம்பத்திலிருந்து தமிழில் ஆராய்ச்சி மேற்கொண்டுவந்த திரு ஃப்ரான்ஸுவா குரோ (Francois Gros) (1933-2021) பாரீஸில், பாரீஸ் பல்கலைக் கழகத்தின் கீழ்வரும் உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Ecole Pratique Des Hautes Etudes) தென்னிந்திய வரலாறு மற்றும் மொழியியலுக்கான (Philology) பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

பாண்டிச்சேரி ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிட்யூட்டின் இந்தியவியல் துறையில் தனது ஆராய்ச்சிப் பணியைத் துவக்கிய குரோ 1977 முதல் 1989 வரை தூரக் கிழக்கு நாடுகளுக்கான ஃப்ரெஞ்ச் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராகப் பணிபுரிந்தார்.

சங்கத் தமிழிலிருந்து தற்காலத் தமிழ்வரை நீளும் இவரது ஈடுபாடு பல்வேறு தமிழ்ப் படைப்புகளை ஃப்ரெஞ்ச் மொழிக்குக் கொண்டு சென்றுள்ளது. பரிபாடல் (1968) திருக்குறள் காமத்துப்பால் (1993) இரண்டும் பிரெஞ்சில் நூல் வடிவம் பெற்றுள்ளன. தற்காலத் தமிழ்ச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது.

வருடத்தில் சிறு பகுதியைப் பாண்டிச்சேரியில் தனது ஆராய்ச்சிப் பணிகளுக்காகச் செலவிட்டுவந்த திரு குரோ ஃப்ரான்ஸின் தென்கிழக்கில் உள்ள லியோன் நகரத்தில் வாழ்ந்துவந்தார். அண்மைக்காலமாக உடல்நலக் குறைவால் புதுச்சேரிக்கு வராமல் ஃப்ரான்ஸ் நாட்டிலேயே தங்கியிருந்த குரோ தன்னிடமிருந்த சுமார் 10 ஆயிரம் நூல்களை கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்துக்கு வழங்கிவிட்டார்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments