×

அனைத்துலகத் தொடர்பகம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைக் கட்டமைப்புக்களில்

அனைத்துலகத்தொடர்பகமும் ஒன்றாகும். இதன் பொறுப்பாளராக திரு கஸ்ரோ என்றழைக்கப்படும் வீ. மணிவண்ணன் அவர்கள் பணியாற்றினார்.

அனைத்துலகத்தொடர்பகமானது உலகளாவிய ரீதியில் பரந்துபட்ட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வந்தது. நாடுகள் தோறும் தனது கிளைகளை நிறுவி, அக்கிளைகளினூடாக அந்தந்த நாடுகளில் தனது செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. இக்கிளை அலுவலகங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் கிளை அல்லது தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என அழைக்கப்பட்டது.

ஒரு நாட்டின் தூதரகம் எப்படிச் செயற்படுமோ அதுபோன்றே இக்கிளைகளின் செயற்பாடுகளும் இருந்து வருகின்றன.

அந்தவகையில் கிளைகளின் செயற்பாடுகளாக:

  1. எம்மின மக்களை ஒருங்கிணைத்து, கட்டமைத்து வழிநடத்துதல்.
  2. புலம்பெயர்வாழ் சிறார்களுக்கான தமிழ்மொழிக்கல்வி.
  3. விளையாட்டுத்துறையூடாக விளையாட்டு நிகழ்வுகள்.
  4. கலைபண்பாட்டுக்கழகமூடாக கலை நிகழ்வுகள்.
  5. பரப்புரைப்பிரிவினூடாக தமிழீழ தேசத்தில் நடைபெறும் சிங்களத்தின் வெறியாட்டங்களை உலகிற்கு எடுத்துச் செல்லல்.
  6. வெளியீட்டுப்பிரிவினூடாக எமது பாடல்கள், காணொளிகள், நூல்கள், தாயகம் சார்ந்த பொருட்கள் என புலம்பெயர் மக்களிற்களித்தல்.
  1. மாவீரர் பணிமனையூடாக புலம்பெயர் தேசத்தில் வாழும் மாவீரர்களின் குடும்பங்களை இணைத்து மாவீரர் குடும்பங்களுக்கான மதிப்பளித்தல் மற்றும்மாவீரர்நாள் நிகழ்வினை ஒழுங்குபடுத்துதலோடு அனைத்து வணக்க நிகழ்வுகளையும் ஒழுங்குபடுத்தி நடைமுறைப்படுத்துவதோடு, புலம்பெயர் தேசங்களில் உள்ள மாவீரர்களின் நினைவிடங்களைப் பராமரித்து பாதுகாத்தல்.
  2. நிதிப்பிரிவினூடாக தாயகத்திற்கான நிதிதிரட்டல்.
  3. இளையோர் அமைப்பினூடாக புலம்பெயர் இளையோருக்கும் தாயகத்திற்குமான உறவுப்பாலத்தை மேம்படுத்துதல்.
  1. தமிழ்ப்பெண்கள் அமைப்பினூடாக தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான புனர்வாழ்வுப்பணிகளும், புலம்பெயர்தேசத்தில் உள்ள பெண்களிற்கான உளவளப்பணிகளும்.

இதனை விட இன்னும் பல வேலைத்திட்டங்களை தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் நடைமுறைப்படுத்தி வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments