போர்த்துக்கீசிய காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து வீரப்போர் நிகழ்த்திய இரண்டாம் சங்கிலி யாழ்ப்பாண தமிழ் அரசின் கடைசி மன்னன் (கி.பி. 1617 -1619) ஆவான்.யாழ்ப்பாண அரசு 29 வன்னி சிற்றரசர்களின் மீது மேலாதிக்கம் பெற்று விளங்கியது. முறையாகத் திறை செலுத்த மறுத்த இரண்டாம் சங்கிலி மன்னனை எதிர்த்து போர்த்துக்கீசியர் இரண்டுமுறை படையெடுத்தார்கள்.
போர்த்துக்கீசியத் தளபதி பிலிப் த ஒலிவேறா தலைமை ஏற்று வந்த சிங்களக் கூலிப்படையை உள்ளடக்கிய படையுடன் சங்கிலி குமாரன் போரிட்டான் . தமிழர் படை தோல்வி கண்டது .400 ஆண்டுகாலம் சதந்திரமாக இருந்த தமிழ் யாழ்ப்பாண அரசு சிங்களக் கூலிப்படைகளின் உதவியுடன் போர்த்துக்கீசியர்களால் கைக்கொள்ளப்பட்டது . போர்த்துக்கீசியர்களால் கைது செய்யப்பட்ட சங்கிலி மன்னன் கோவாவிற்குக் கொண்டுசெல்லப்பட்டு 1621 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.