மட்டக்களப்பு, வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் மிகவும் உணர்வு பூர்வமாக பெருமளவான மக்களின் கண்ணீரின் மத்தியில் இடம்பெற்றது.
கார்த்திகை 27ஆம் நாளான தமிழர் தாயகப் பிரதேசங்களில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெறுகின்றன.
அந்த வகையில் மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஒன்று கூடிய பெருமளவான மக்கள் உயிர் நீத்த உறவுகளுக்கு சுடரேற்றி கண்ணீர் வணக்கம் செலுத்தனர்.
விடுதலை போராட்டத்தில் தனது மூன்று பிள்ளைகளை இழந்த கனகம்மா தனது மூத்த மகனான கரும்புலி கண்ணாளனின் கல்லறையை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் தேடியுள்ளார். தனது மகன் விடுதலைப் போராட்ட காலத்தில் கரும்புலி படைப்பிரிவில் களமுனையில் வீரச்சாவை தழுவினார்.
கண்டலடி ஆண்டாங்குளம் கோட்ட மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவு பணிக்காக சுமார் 70 வயது நிரம்பிய கணகம்மா வயது முதிர்ந்த நிலையிலும் தனது மகனின் நினைவேந்தல் கல்லறை வைக்கப்பட்ட இடங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளார்.
இலங்கை பாதுகாப்பு படையினரால் இடித்து அழிக்கப்பட்டு எஞ்சிய கல்லறைகள் வெளிக்கிளம்பும் போது ஒவ்வொன்றாக பார்த்து தனது மகன் மற்றும் தனது ஏனைய உறவுகளின் பிள்ளைகளின் கல்லறைகள் இருக்கின்றனவா என தேடியுள்ளார்.
கரும்புலி கண்ணாளன் மட்டுமின்றி ஒரு பெண், இரு ஆண்கள் என மொத்தமாக மூன்று பிள்ளைகளை விடுதலைப் போராட்டத்திற்கு அனுப்பியதாக தெரிவித்தார்.