×

கந்தளாய் படுகொலை – 04,05.06.1986

1986ம் ஆண்டு யூன் மாதம் நான்காம், ஐந்தாம் திகதிகளில்  கந்தளாய் நான்காம் கட்டை என்னும் இடத்தில் காவல் நின்ற விமானப் படையினரும், ஊர்காவற் படையினரும் இணைந்து பிரயாணிகள் பேருந்தினை வழிமறித்து தமிழர்களை அடையாளங்கண்டு தாக்கினார்கள். இவர்களின் தாக்குதலில் பல பொதுமக்கள் உயிரிழந்தார்கள். பலர் காணாமற் போனார்கள். சிலர் காயத்துடன் உயிர் தப்பினார்கள்.

1986.06.05 ஆம் திகதி வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி இருபத்தைந்திற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்தைக் கந்தளாய் நான்காம் கட்டைப் பகுதியில் வைத்து விமானப்படையினரும் ஊர்காவல் படையினரும் இணைந்து தாக்கியதுடன், பேருந்தினைத் தீயிட்டும் எரித்தார்கள். எரிந்த நிலையில் பேருந்திலிருந்து ஒரு சிறுமி, ஒரு கைக்குழந்தை உட்பட பத்திற்கும் மேற்பட்டவர்களது கருகிய உடல்கள் மீட்கப்பட்டன. இரண்டு தினங்களிலும் விமானப் படையினர், ஊர்காவற் படையினரின் தாக்குலில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததுடன், முப்பத்தைந்திற்கும் மேற்பட்டவர்களுக்கு என்ன நடந்ததென்று இன்றுவரை தெரியவில்லை.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments