மக்கள் நிர்வாக விடயங்களுக்காக புலிகளின் வேறு ஒரு பிரிவாக அரசியல் பிரிவு செயற்பட்டது. சு. ப. தமிழ்ச்செல்வன் நவம்பர் 2007 இல் இறக்கும் வரை இதன் தலைவராகச் செயற்பட்டார். இவருக்கும் பின் பாலசிங்கம் நடேசன் தலைமைப் பொறுப்பை ஏற்று, இவர் 18 மே 2009 இல் இறக்கும் வரை அதன் தலைவராக இருந்தார். அரசியல் பிரிவு பல திணைக்களங்களை தன்னுள் கொண்டிருந்தது. இது ஈழப்போர் முடியும் வரை கிட்டத்தட்ட ஒரு தனிநாடாகச் செயலாற்றியது. ஆயினும் இலங்கை அரசாங்கத்துடனான சமாதானப் பேச்சு வார்த்தைகளின்போது, புலிகளின் ஆலோசகரும் தலைமைப் பேச்சாளருமான அன்ரன் பாலசிங்கம் மூலம் அரசியல் பிரிவு உள்வாங்களுடன் செயற்படுத்தப்பட்டது. ஆயினும் முக்கிய தீர்மானங்கள் பாலசிங்கத்தினாலும் தேசிய தலைவர் பிரபாகரனினாலும் எடுக்கப்பட்டன.
Building_the_state_Tamileelam_von Stokke