×

விடுதலைப்புலிகளின் படைத்துறை தந்திரோபாய உருமறைப்பு

விடுதலைப்புலிகளின் படைத்துறை தந்திரோபாய உருமறைப்பு

விடுதலைப்புலிகளின் படைத்துறை தந்திரோபாய உருமறைப்புத் தாக்குதலின் போது பயன்படுத்தும் உருமறைப்பு தொடர்பாக… தந்திரோபாய உருமறைப்பு பற்றிய போர்ப்பயிற்சியானது, ஒருவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து, போராளியாகத் தன்னை மாற்றிக் கொள்வதற்கான அடிப்படை பயிற்சி பாசறையில் பயிற்சியினை பெற்றுக் கொள்ளும் போது அவருக்கான போர்ச்சூழல், உருமறைப்பு என்பன கற்பிக்கப்படுகின்றது. அடிப்படைப் பயிற்சியின்போது சாதாரணமான முறையில் பொதுவாகக் கற்பிக்கப்பட்டு, பின்னர் அடிப்படைப் பயிற்சியினை நிறைவுசெய்து படையணிகள் ரீதியாக உள்வாங்கப்படும் பொழுது அந்த அந்தப் படையணிகளுக்கு ஏற்ற தாக்குதல் ரீதியாகவும், நீர் – நிலத்திற்கு ஏற்றவாறும் உருமறைப்புத் தாக்குதல் மேற்கொள்ளும் முறைகள் தொடர்பாக கடுமையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றது. வேவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, பதுங்கித்தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, எதிரியின் எல்லைக்குள் ஊடுருவித் தாக்குதல் – குறிசூட்டுத் தாக்குதல்களின் போதும் இயற்கையின் சூழலுக்கு ஏற்றவாறும்; தாக்குதல் மேற்கொள்ள இருக்கும் சூழலின் பின்னணிக்கு ஏற்ப தாக்குதல் மேற்கொள்ள இருக்கும் போராளிகள் தம்மை உருமறைத்து, அச் சூழலுக்கு ஏற்றவகையில் நடவடிக்கைகளைகளுக்கேற்ப தங்களை உரு மாற்றிக்கொண்டு நகர்ந்துசெல்வார்கள்.

உருமறைப்புக்காக பயன்படுத்துபவை. அனைத்து உலகப் படைத்தரப்பில் பயன்படுத்தும் (camouflage ghillie suit – Helmet covering cloth) முறையில் சாதாரண சணல் நூலினால் நெய்யப்பட்ட சாக்குத்தொப்பி மற்றும் தலையிலிருந்து தோள் வரை நீண்டிருக்கும் தொப்பி, சிறு சிறு துணிகளினால் நெய்யப்பட்ட மேலங்கி முறையிலான அங்கிகளினால் தம்மை முழுமையாக மறைத்து நகர்வுகளை மேற்கொள்ளுதல். அத்தோடு ஊடுருவித் தாக்குதல்கள் மற்றும் பதுங்கித் தாக்குதல்கள் போன்றவற்றை மேற்கொள்ளும் போது உருமறைப்புக்கள் பயன் படுத்தப்படுகின்றன. சிறு மினிமுகாம் தாக்குதல்கள், பதுங்கித் தாக்குதல்கள், வேவு நடவடிக்கைகளின் போது வரிச்சீரூடையில் இலைகளையும் செடிகளைகளையும் வைத்து தம்மை உருமறைப்பதுமுண்டு. இவர்களைப்போல் மோட்டார் படையணி எறிகணைகளைச் செலுத்துவதற்கு அதற்கான முன்னிலை நோக்குநராக செயற்படுபவர்கள் உருமறைத்து நகர்வதும் உண்டு. (முன்னிலை நோக்குநராக படை நிலைகளுக்குள் ஊடுருவிச் சென்ற கரும்புலிகள் அணியும் செயற்பட்ட வரலாறுகளும் உண்டு. (ஜெயசிக்குறு எதிர்ச்சமர் நடவடிக்கைகளில், ஓயாத அலைகள் 03 தொடர் நடவடிக்கைகளில்)

காதுப்பஞ்சு . ஆர்.பி.ஜி. உந்துகணை சூட்டாளரும், ஆட்லறி பீரங்கி, மோட்டார் எறிகணை படையணியைச் சார்ந்தவர்கள் பீரங்கி – எறிகணைச் சத்தங்கள் தம் காதினை பாதித்துவிடாதவாறு காதினுள் வைத்துக்கொள்ளும் ஒரு சாதாரண பஞ்சாகும். அதற்கு பதிலாக Headphone – தலையணி பயன்படுத்துவதும் உண்டு. இதை அனைத்துலக படைத்தரப்பில் Army Shooting Earmuffs Tactical Helmet Headset Electronic Hearing Protector Active Noise Reduction Hunting Headphone என்று அழைக்கப்படும். லெப். கேணல் குட்டிச்சிறி மோட்டார் படையணியைச் சேர்ந்த மகளிரணி இதனை காதில் அணிந்திருப்பதை காணலாம்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments