சிவராம் இனப்பற்றும் நேர்மையும் துணிச்சலும் நிறைந்த ஊடகப்போராளியும் இராணுவ ஆய்வாளரும் ஆவார்.
சிங்கள பேரினவாதத்தின் கோட்டையில் நின்றுகொண்டே அது தமிழர் தேசத்திற்கு எதிராகப் புரிகின்ற அநீதிகளையும் அக்கிரமங்களையும் உலகிற்கு உறுதியாக எடுத்துக்கூறினார்.
இவர் 29.04.2005 அன்று கடத்தப்பட்டு கொடுரமான முறையில் கொல்லப்பட்டார். சிவராம் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து அவரது நற்பணிகளைக் கௌரவிக்கும் முகமாக தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் மாமனிதர் என்ற அதியுயர் தேசியவிருதை வழங்கி கௌரவித்தார் .