×

மண்டைதீவுக் கடலில் நிகழ்ந்த படுகொலை – 10.06.1986

யாழ்ப்பாணக் குடாநாட்டின் நகர மையத்திலிருந்து தெற்குக் கரையோரக் கிராமங்களாகக் குருநகர், பாசையூர், மண்டைதீவு ஆகியன அமைந்துள்ளன.  யாழ்ப்பாணத்தின் தென்மேற்காக வேலணைப் பிரதேசசபை எல்லையினுள் மண்டைதீவு அமைந்துள்ளது. மூன்று பக்கமும் கடலாற் சூழப்பட்டதும், மறுபுறம் நிலப்பரப்பையும் கொண்ட ஆயிரத்து இருநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கிராமமாக மண்டைதீவு காணப்படுகிறது. யாழ். நகரத்தின் இக்கரையோரக் கிராம மக்கள் தமது சீவனோபாயத் தொழிலாகக் கடற்தொழிலையே நம்பி வாழ்கின்றனர்.

10.06.1986 அன்று கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்களை நோக்கி விசைப்படகினில் வந்த கறுப்புச்சீருடை அணிந்த கடற்படையினரைக் கண்டு மீனவர்கள் தமது கைகளை உயர்த்தியவாறு தாம் பொதுமக்கள் என்பதை அடையாளம் காட்டினார்கள். ஆனால் கடற்படையினர் மீனவர்களைக் கடலில் வைத்து கண்களைத் தோண்டியும், வயிற்றினை வெட்டியும் இறுதியில் துப்பாக்கியால் சுட்டும் கைக்குண்டுகளை வீசியும் கொன்றனர்.

இச்சம்பவத்தில் குருநகரைச் சேர்ந்த முப்பத்திரண்டு பேரும் மண்டைதீவைச் சேர்ந்த ஒருவருமாக மொத்தம் முப்பத்துமூன்று மீனவர்கள் உயிரிழந்தார்கள். மீனவர்களின் படகுகள், வலைகள், கருவிகள் என்பன சேதமாக்கப்பட்டன.

10.06.1986 அன்று மண்டைதீவுக் கடலில் நிகழ்ந்த படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:

  1. கந்தையா முத்துசாமி (வயது 55)
  2. கிறிஸ்தோப்பர் ஸ்நாச்சி (வயது 54)
  3. பங்கிராஸ் தார்சியஸ் (வயது 30)
  4. பங்கிராஸ் அன்ரன் விமலாதாஸ் தவம் (வயது 23)
  5. பங்கிராஸ் அன்ரனி யூலியஸ் (வயது 33)
  6. பற்றிக் அலோசியஸ் டோனாஸ் (வயது 58)
  7. தமியன் எருமின் றூபேட் உதயகுமாரன் (வயது 26)
  8. முடியப்பு அன்ரனிதாஸ் இராஜகுமார் (வயது 32)
  9. மனுவல் பயர்ஸ் (வயது 56)
  10. மனுவல் பற்றிக் (வயது 60)
  11. மனுவல் மரியநாயகம் (வயது 38)
  12. முத்தையா சுவாமிநாதன் செபமாலை யோசெப் (வயது 57)
  13. அன்ரன் செல்ரொன் வீன் (வயது 21)
  14. அலோசியஸ் டியூஸ் டோறோஸ்டியூக் (வயது 24)
  15. அலோசியஸ் லிகோரி டோனாஸ் மௌன்ட் (வயது 34)
  16. ஆசீர்வாதம் அந்தோனிப்பிள்ளை (வயது 68)
  17. அருளானந்தம் பெனடிக்ற் (வயது 32)
  18. அருளானந்தம் பொனிபஸ் (வயது 60)
  19. யோன் யோஜ் (வயது 56)
  20. யோசப்பர்ணாந்து அந்தோனிப்பிள்ளை பர்ணாந்து (வயது 62)
  21. பெனடிக்ற் கியூபேட் றேசன் றமேஸ் (வயது 19)
  22. பெனடிக்ற் மாசில்லா மகேந்திரன் (வயது 25)
  23. பெனடிக்ற் அலிஸ்ரன் (வயது 30)
  24. பெனடிக்ற் லிகோரி (வயது 27)
  25. செபதேயு சேவியர் (வயது 62)
  26. சோமசுந்தரம் சோதிநாதன் (வயது 62)
  27. ஞானப்பிரகாசம் எட்வேட்கெலின்சன் ஜெயகாந்தன் (வயது 17)
  28. சுப்பிரமணியம் கோபாலகிருஸ்ணன் (வயது 20)
  29. சவிரியான் யேசுதாசன் நிக்சன் (வயது 13)
  30. விசுவநாதன் விமலநாதன் (வயது 23)
  31. எமிலியானுஸ் மக்சிமஸ் ஈஸ்வரன் (வயது 21)

குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments