
குத்தாலத்தை அடுத்த மருதஞ்சேரியில் 1954 இல் பிறந்த சாரங்கபாணி, மயிலாடுதுறை ஏ.வி.சி கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் படித்து வந்தார். “தமிழுக்காக உயிர்த்தியாகம் செய்பவர்கள் உண்மையான தமிழர்கள்” என உணர்ச்சிக் கொந்தளிப்போடு தொடர்ந்து மாணவர்களிடம் பேசி மாணவர் போராட்டத்தை வேகப்படுத்தும் வேலைகளில் வேகம் காட்டிய சாரங்கபாணி, அதன் தொடர்ச்சியாக 15.03.1965 அன்று உடலுக்குத் தீ வைத்துக்கொண்டு உயிர் துறந்தார்.