
பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரரின் உறவினர்களால் முன்னெடுக்கப் பட்ட குறித்த சிரமதானப்பணியில் முன்னாள் போராளிகள், இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும்.கலந்து கொண்டு மாவீரர் துயிலும் இல்லத் துப்பரவுப் பணிகளை மேற்கொண்டனர்.
நவம்பர் 27ஆம் நாளான தமிழர் தாயகப் பிரதேசங்களில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெறுகின்றன.அந்த வகையில் பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஒன்று கூடிய பெருமளவான மக்கள் உயிர் நீத்த உறவுகளுக்கு சுடரேற்றி கண்ணீர் வணக்கம் செலுத்தினர்.