ஈழத்தின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் உள்ள ஒரு அழகிய கிராமம் ஆகும்.
இது ஒரு பழம்பெரும் கிராமமாக உள்ளது என்பதுடன் பச்சிலைப்பள்ளியின் ஆதிக்குடிகள் வாழ்ந்துள்ளனர். முகாவில் என்பது முகாமுக்கு முன்னுள்ள இடம் என்றும், அதாவது உடுத்துறைப் பகுதியில் ஒரு முகாம் இயங்கியதாகவும் அதற்கு முன்னுள்ள இடம் முகாவில் என்று கல்வியளாலர்கள் கூறுகின்றனர்.
இது ஒரு போத்துக்கேயர் காலத்து சொல்லாகும் என்ற ஒரு கருத்து உள்ளது. இப்பகுதியில் காணப்பட்ட சந்தை சோழர்கால வெற்றிலைக் கேணியில் உள்ள துறைமுகத்தின் ஊடாக இருவழி வணிகம் இங்கு இடம்பெற்று இருப்பதற்கான சான்றுகள் உள்ளன. இக்கிராமம் மிகப் புராதண கிராமங்களான புலோலி மற்றும் முகமாலை, இயக்கச்சி ஆகிய கிராமங்களுடன் வணிக மற்றும் புவியல் தொடர்புடைய கிராமமாக உள்ளது.
திரிகாய் அம்மன் கோவில் மிகவும் பழமையானதும் சிறப்பு மிக்க ஒரு ஆன்மீகத் தளமாக விளங்குகிறது. மற்றும் இங்கு திரிகாய் அம்மன் கோவில், சல்லியடிப் பிள்ளையார் கோவில், முகாவில் முருகன் கோவில், பறங்கிக்காடு வைரவர் கோவில், லட்சுனா வைரவர் கோவில், வாழைத் தோட்ட அம்மன் கோவில் என கிராமிய வழிபாடுகள் நிறைந்து கிடக்கும்.
ஊராகும் அன்றும் இன்றும் விவசாயக் கிராமமாக இருக்கிறது. முகாவில் நீர்வளச் செழிப்பு மிக்க இக் கிராமத்தில் நாற்பது ஏக்கருக்கு மேற்பட்ட வயற்காணியும், இருபது ஏக்கருக்கு மேற்பட்ட மேட்டுப்பயிர் செய்கையும், இருநூற்று ஜம்பது ஏக்கருக்கு மேற்பட்ட தென்னந்தோட்டக் காணிகளையும் கொண்டு எங்கும் பசுமையும் உழவுச் செழிப்பும் நிறைந்த கிராமமாக இக் கிராமமாகும்.
திரிகாய் அம்மன் கோவில் குளம், பெரிய முகாவில் குளம், முகாவில் குளம் யாவில் குளம், பறையன் குளம் போன்ற குளங்கள் மூலம் நீர்ச்செழிப்பு மிக்க பூமியாக முகாவில் உள்ளது என்பதுடன், எமது முன்னோர்களின் புவியியல் அறிவு பொருளாதரா அறிவின் ஆற்றல் இதன் மூலம் வெளிப்பட்டு நிற்க்கிறது. போர்காலத்தில் இங்குள்ள தென்னைப் பயிர்கள் செல் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டாலும், மீளக் குடியமர்ந்த மக்கள் மீண்டும் தென்னைப் பயிர்செய்கையில் ஈடுபட்டு மீள தமது கிராமத்தை செழிப்புறச் செய்துள்ளனர்.
போரிலே பல தியாகங்களையும் மாவீரச் செல்வங்களையும் தந்த இக்கிரமம் ஈழப் போரியல் வரலாற்றில் முக்கிய பங்கு வகித்தது.
வட்டக்கச்சி
வினோத்