
1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம், ஒன்பதாம், பத்தாம் திகதிகளில் கடற்படையினர், விமானப் படையினர், இராணுவத்தினர் கூட்டாக இணைந்து மூதூர் கடற்கரைச் சேனைப் பகுதிமீது தாக்குதல் நடத்தினார்கள்.
இத் தாக்குதலில் தரை வழியாற் சென்ற இராணுவத்தினரால் ஆலயங்களில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் மோசமாகத் தாக்கப்பட்டார்கள். வீடுகளிலிருநத் பலர் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்கள். உயிரிழந்தவர்களின் உடல்களை இராணுவத்தினர் வீடுகளுடன் சேர்த்து எரியூட்டினர்.
ஆலயங்களிற் தங்கியிருந்த எழுபதிற்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். இவர்கள் இதுவரை திரும்பி வரவில்லை. மூன்று நாள் தாக்குதலில் இருபதிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள். பலர் காயமடைந்திருந்தனர். நூறிற்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டன.
மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.