
பெயர்: நடராசா தங்கவேல் ஊர்: வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்ட முன்னோடிகளில் ஒருவர். இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட இவர், கொழும்பின் வெலிக்கடைச் சிறையில் தமிழ்க் கைதிகளுக்கு எதிரான தாக்குதலில் சிங்களக் காடையர்களால் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இவரது கொடூர மரணம் தமிழீழத்திலும் தமிழ்நாட்டிலும் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகப் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.