யாழ். குடாநாட்டின் வடமராட்சிப் பகுதியில் நெல்லியடி, கரவெட்டிப் பிரதேசங்கள் அமைந்துள்ளன. இது யாழ்.பருத்தித்துறை வீதியில் பருத்தித்துறையிலிருந்து மூன்று மைல் தூரத்தில் அமைந்துள்ளது. வடமராட்சியின் தெற்கு மற்றும் மேற்குப் பிரதேசங்களுக்கு மையமாக நெல்லியடி நகரமும் வடமராட்சியின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு மையமாக பருத்தித்துறை நகரும் அமைந்துள்ளது.
நெல்லியடிப் பிரதேசத்தில் வாழ்கின்ற இருபத்தையாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் தேவைகளை நிறைவு செய்வதாக நெல்லியடிச் சந்தை உள்ளது.
29.08.1990 காலை 9:30 மணியளவில் வழமைபோல தமது அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்யும் முகமாக நெல்லியடி மத்திய சந்தைக்குப் பல தரப்பட்ட கிராமத்திலிருந்தும் மக்கள் ஒன்று கூடியிருந்தார்கள். வடமராட்சி வான் பரப்பிற்குள் பிரவேசிதத் இரண்டு “பொம்பர்” விமானங்களும் ஒரு “அவ்ரோ” விமானமும் இணைந்து நெல்லியடி மத்திய சந்தைப் பகுதியை நோக்கி குண்டுத் தாக்குதலை நடத்தின. காலை வேளையில் சந்தையில் பொருட்களை வாங்குவதற்கும் விற்பதற்குமென வந்த மக்களில் சிறுவர்கள், பெண்கள் உட்பட பதினாறு பேர் சம்பவ இடத்தில் உயிரிழக்க இருபத்துநான்கு பேர் காயமடைந்தார்கள்.
29.08.1990 அன்று நெல்லியடிச் சந்தைப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:
குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.
மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.