×

நிலாவெளி படுகொலை – 16.09.1985

திருகோணமலை மாவட்டத்தின்  குச்சவெளிப் பிரதேசசெயலர் பிரிவிற்குற்பட்ட நிலாவெளிப் பிரதேசமானது, திருகோணமலை நகரிலிருந்து பத்து கி.மீ தூரத்திலுள்ளது. 1983 ஆம் ஆண்டு இனக்கொலையைத் தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு நிலாவெளி அகதி முகாம் மக்களால் நிறைந்து காணப்பட்டது.

16.09.1985 அன்று நிலாவெளியில் நிலைகொண்டிருந்த இராணுவமும், ஊர்காவற்படையினரும் சேர்ந்து அகதி முகாமைச் சுற்றிவளைத்தனர். அங்கிருந்த முப்பதிற்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கைதுசெய்து, அவ்விடத்திலேயே நிறுத்தி வைத்துச் சுட்டதில் அனைவருமே உயிரிழந்தனர்.

16.09.1985 அன்று நிலாவெளிப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:

  1. முருகேசு தங்கராசா (வயது 46 – விவசாயம்)
  2. கச்சுமுகைதீன் முகம்மதுகாலித் (வயது 33 – வியாபாரம்)
  3. வேலு சிவசுந்தரம் (வயது 24 – வியாபாரம்)
  4. வேலு சிதம்பரநாதன் (வயது 25 – வியாபாரம்)
  5. செல்லத்தம்பி நிர்மலானந்தன் (வயது 26 – வியாபாரம்)
  6. சோசுந்தரலிங்கம் அருட்குமரன் (வயது 20 – வியாபாரம்)
  7. அந்தோனிப்பிள்ளை கபிரியேல்
  8. இராஜேந்திரன் (வயது 29 – வியாபாரம்)
  9. செய்யதுபுகாரி அப்துரசாக் (வயது 32 – வியாபாரம்)
  10. கந்தையா கந்தசாமி (வயது 28 – சாரதி)
  11. கணபதிப்பிள்ளை சௌந்தரராஜன் (வயது 28 – சாரதி)
  12. செல்லத்தம்பி ரட்ணராஜா (வயது 41 – மெக்கானிக்)
  13. நேசதுரை ரெறன்ஸ் (வயது 19 – மெக்கானிக்)
  14. கதிர்காமத்தம்பி கனகசபை (வயது 39 – தொழிலாளி)
  15. முகமட் காசிம் முகமட்ராசிக் (வயது 31 – தொழிலாளி)
  16. தாமோதரம்பிள்ளை நேமிநாதன் (வயது 19 – மாணவன்)
  17. வல்லிபுரம் தருமலிங்கம் (வயது 18 – மாணவன்)
  18. தர்மதாஸ் உதயநேசன் (வயது 19 – கடற்தொழில்)
  19. சுப்பிரமணியம் காளிராஜா (வயது 20 – கடற்தொழில்)
  20. செல்வவினாயகம் ஜெயகோபன் (வயது 26 – கடற்தொழில்)
  21. இராசையா துரைநாயகம் (வயது 36 – கமம்)
  22. தாமோதரம்பிள்ளை சண்முகதாசன் (வயது 24 – கமம்)
  23. மாமாங்கம் ரஞ்சநேசன் (வயது 21 – கமம்)
  24. அபுசாலிபு அப்துல்நாயீர் (வயது 28 – கமம்)
  25. சித்திரவேல் மாரிமுத்து (வயது 53 – காவலாளி)
  26. சிங்கராயர் கிலீற்றஸ் பிரேமதாஸ் (வயது 20 – ஊழியர்)
  27. சிவபாலன் கெங்காதரன் (வயது 34 – இலிகிதர்)
  28. பொன்னுத்துரை பார்த்தீபன் (வயது 27 – தொழிலாளி)
  29. யோகராசா (வயது 23 – தொழிலாளி)
  30. இரத்தினசாமி பார்வதி (வயது 30 – வீட்டுப்பணி)

குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments