‘மே 18′ முள்ளிவாய்க்கால் கஞ்சி: ஈழத்தமிழர் உயிரை காத்த இந்த உணவை தயாரிப்பது எப்படி?
வலிகள் நிறைந்த யுத்த காலத்தின் கடைசி நாட்களில் இந்த கஞ்சி தான் லட்சக்கணக்கான மக்களின் உயிரை காத்தது.
ரஞ்சன் அருண் பிரசாத்
பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை
17 மே 2023
உலக அளவில் பரவலாக வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்கள் மத்தியில் என்றுமே மறக்க முடியாத நாளாக மே 18ஆம் தேதி வரலாற்றில் பதிவாகியுள்ளது.
2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி யுத்தம் முடிவடைந்த நிலையில், யுத்தத்தின் கடைசி நாட்களில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக ஆண்டுதோறும் மே 18 தினம் அனுசரிக்கப்படுகிறது.
குறிப்பாக 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் உக்கிரமடைந்த சந்தர்ப்பத்தில் அந்த யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலிருந்த மக்கள் பல வார காலமாக உணவிற்கு பாரிய சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
அந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு கிடைத்த அரிசியை கொண்டு, கஞ்சி தயாரித்து தமது பசியை தமிழர்கள் போக்கிக் கொண்டனர்.
இறுதி யுத்தத்தில் சிக்குண்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் பசியை போக்கிய கஞ்சி உணவை, ஈழத் தமிழர்கள் இன்றும் மறக்கவில்லை.
அப்போது முதல் ஆண்டுதோறும் மே மாதம் 18ஆம் தேதிக்கு முதல் சுமார் ஒரு வார காலம் வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த கஞ்சி சமைக்கப்பட்டு, மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றது.
இவ்வாறு தயாரிக்கப்படும் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சியை’ எவ்வாறு சமைப்பது?
இதுவே ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ என அழைக்கப்படுகிறது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட கஞ்சியானது, 2009ஆம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற தருணத்தில் மிகவும் சுவையாக இருந்தது என கஞ்சியை தயாரித்து வழங்கும் முல்லைத்தீவு – புதுகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அந்தோனிபிள்ளை மேரி ரெஜிந்தா கூறுகின்றார்.
எனினும், தற்போது முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கு சற்று சுவை சேர்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இறுதி வரை உயிர் காத்த உப்புக் கஞ்சி
கஞ்சி ஈழத் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒன்று.