கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேசசெயலர் பிரிவில் யு-9 வீதியை உள்ளடக்கி அமைந்திருப்பதால் பரந்தன் நகரம் முதன்மையான நகரமாக விளங்குகின்றது. மேலும் இங்கு இரசாயணத் தொழிற்சாலை அமைந்திருந்ததும் இப்பகுதி முக்கியத்துவம் பெற்றிருந்தமைக்கு முக்கிய காரணமாகும். இங்கு வாழும் மக்களின் பிரதான தொழில் விவசாயமாகும்.
இப்பிரதேசமானது 1980களிலிருந்து பல்வேறு இராணுவ நடவடிக்கைகளால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசமாக இருக்கின்றது. இந்த வகையில் 24.07.1990 அன்று ஆனையிறவு சுட்டதீவு என்னுமிடத்தில் உலஙகு; வானூர்தி மூலம் இராணுவத் தளபதி “கொப்பேக்கடுவ” தலைமையில் தரையிறக்கப்பட்ட சிறிலங்காப் படையினர் பரந்தன் பகுதியால் முன்னேறி வந்துகொண்டிருந்தவேளை, பரந்தன் சந்தியை அண்டிய பிரதேசத்தில் வீடுகளிலிருந்த பொதுமக்களைத் தாக்கினார்கள். வீடுகளிலிருந்த மக்களைச் சுட்டு வீடுகளுடன் சேர்த்து எரித்தனர். இச்சம்பவத்தில் பதின்நான்கிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள். பலர் காயமடைந்தனர்.
இராணுவம் முன்னேறி வந்ததால் இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் இடம் பெயர்ந்து வேறு இடங்களிற்குச் சென்றனர். அங்கு தமது உறவுகளைக் காணாது தவித்தனர். மீண்டும் தமது சொந்த இடத்திற்கு திரும்பி வந்தபோது வீடுகளினுள் இரத்தக்கறைகள் காணப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். நெல்லு மூட்டைகள் அடுக்கி வைக்கும் கொட்டிலினுள் சடலங்கள் போட்டு எரிக்கபப் ட்ட நிலையிலும் அரைகுறையாக எரிந்த நிலையிலும் காணப்பட்டன. அரைகுறையாகக் காணப்பட்ட சடலங்களை உறவினர்கள் எடுத்து அடக்கம் செய்தனர்.
சம்பவத்தை நேரில் பார்த்ததுடன், கணவரையிழந்த மங்களேஸ்வரி தெரிவிக்கையில்:
காலை 5.30 மணியளவில ;ஆனையிறவிலிருந்து வநத் இராணுவத்தினரால் வீடுகளில் உள்ளவர்களையும் வயல்களில் வேலை செய்தவர்களையும் சுட்டும் எரித்தும் வந்தனர். இதில் எனது உறவினர் ஒருவர் பலியானார். இச்சம்பவத்தை என் கண்ணால் கண்டேன்.
24.07.1990 அன்று பரந்தன் சந்தைப் படுகொலையில் கொல்லப்பட்ட விபரம்:
குறிப்பு: இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.
மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.