×

நெற்கட்டும்செவல் பாளையத்தின் பாளையக்காரர் பூலித்தேவனின்

நெற்கட்டும்செவல் பாளையத்தின் பாளையக்காரர் பூலித்தேவனின் படைத் தளபதியும் வீரம் செறிந்த போராளியும் ஆகிய வெண்ணிக் காலாடி ஆங்கிலேயர்களைஎதிர்த்துப் போர் புரியும் போது வீரச்சாவு எய்தினார். கான்சாகிப் (முகமது யூசுப்கான்) தோற்கடிக்கப்பட்ட வாசுதேவநல்லூர் போரில் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்று வெண்ணிக் காலாடி போர் நடத்தினார்.

போரின் போது வாளால் வெட்டப்பட்டு அவருடைய குடல் வெளிவந்துவிட்டது என்றும் , தன் தலையிலிருந்த தலைப்பாகையை அவிழ்த்து வயிற்றைச் சுற்றிக் கட்டிக்கொண்டு வெண்ணிக் காலாடி போரைத் தொடர்ந்தார் என்றும் சொல்லப்படுகிறது . வெற்றிச் செய்தியுடன் பூலித்தேவனை அடைந்த வெண்ணிக்காலாடி அவருடைய மடியிலேயே உயிர் துறந்தார் .(கதைப்பாடல்)

நன்றி. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments