×

ஓயாத அலைகள் 3 – போரியல் ஆய்வு கட்டுரை 3

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் Viet Minh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு.  – போரியல் ஆய்வு கட்டுரை 3

1954 இல் வியட்நாமில் தீன் பீன் பூ பிரதேசத்தில் நிலைகொண்டிருந்த பிரெஞ்சு படைகள் மீது வியட்மின் இயக்கம் (Viet Minh) நடத்திய சமரோடு (Battle of Dien Bien Phu), பிரெஞ்சு ஆதிக்கம் முடிவுபெற்றது என்பதை அறிவீர்கள்.

  • போரியல் ஆய்வாளர்கள், உலக போரியல் வரலாற்றில் நடந்த முக்கியமான சமர்களில் ஒன்றாக இந்த Battle of Dien Bien Phu ஐயும் சேர்த்து குறிப்பிடுவது வழமை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ”தலைவர் பிரபாகரனும் மற்றைய புரட்சியாளர்களும் – சுருக்கமான ஒப்பீடு என்ற தலைப்பில் இரண்டு கட்டுரைகளை எழுதியிருந்தேன்.

மற்றைய புரட்சியாளர்களை விட தலைவர் பிரபாகரன் ஒரு சிறு படி மேலே இருக்கிறார் என குறிப்பிட்டிருந்தேன். அதற்கான காரணமாக இலக்கின் கடினதன்மை, போரியல் காரணிகள் எதிராக இருந்தும் புலிகள் போரியல் ஆற்றலில் மற்றைய புரட்சியாளர்கள் சாதித்ததை விட ஒரு படி மேலே சாதித்தார்கள்  என ஒப்பீட்டு அடிப்படையில் விளக்கியும் இருந்தேன்.

விடுதலை புலிகளின் போரியல் ஆற்றல் மற்றைய புரட்சியாளர்களின் போரியல் ஆற்றலை விட ஒரு படி மேலே என்பதை இன்னும் உங்களுக்கு ஆழமாக விளக்குவதற்காக இந்த பதிவை எழுதியிருக்கிறேன்.

நீங்கள் இந்த பதிவை வாசிக்கும்போது நான் எழுதிய விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) போரியல் ஆய்வு (கட்டுரை 1, 2)” என்பவற்றையும் வாசித்தாக வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இருக்கிறது.

காரணம் இரண்டு கட்டுரைகளிலும், விடுதலைபுலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4 ) விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) இன் ஆங்கில மொழிபெயர்ப்பான  ”Unceasing Waves 3 ( Phase 3, Phase 4)” என்பதை சில இடங்களில் வசதிக்காக (UW3 -P3,P4) என சுருக்கமாக பயன்படுத்தியிருக்கிறேன்.

இனி போரியல்ரீதியான ஒப்பீட்டுக்காக முதலில் Battle of Dien Bien Phu பற்றிய போரியல் தகவல்களை சுருக்கமாக தருகிறேன்.

Battle of Dien Bien Phu இன் பின்ணணி

1953 மே மாதம் ஜெனரல்  Henri Navarre, பிரான்ஸின் இந்தோசீன பிரதேசத்தில் இருக்கும் French Union படைகளுக்கான தலைமை பொறுப்பை ஏற்கிறார்.

வியட்நாமின் வியட்மின் (Viet Minh) இயக்கத்தை முற்றாக ஒடுக்குவதற்கான திட்டம் ஒன்றை தயாரிக்கிறார்.

அந்த திட்டம்தான் “OPERATION CASTOR”.

“OPERATION CASTOR” இன் இலக்கு

இந்த திட்டத்தின்படி, Viet Minh கட்டுப்பாட்டில் இருக்கும் நிலப்பரப்பில் பிரெஞ்சு இராணுவ தளம் அமைக்க முடிவுசெய்யப்பட்டது.

அந்த பிரெஞ்சு இராணுவ தளம் அடிப்படையில் Viet Minh போராளிகளை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட பொறி.

அது எப்படி?

அவ்வாறு இராணுவ தளத்தை அமைப்பதன் மூலம் அந்த தளத்தின் மீது தாக்குதல் நடத்த Viet Minh போராளிகளை தூண்டுதல்.

ஏன் அந்த தளத்தை தாக்குவதற்கு Viet Minh போராளிகளை தூண்ட வேண்டும்?

காரணம் பிரான்ஸ் இராணுவம் அபரிமிதமான சூட்டுவலுவை கொண்டிருப்பதனால் ( Superior Firepower), ஒரு பரந்த வெளியில் ஒரு பெரும் இராணுவதளத்தை அமைத்து, அந்த தளத்தை தாக்க Viet Minh ஐ தூண்டி, பின்னர் தங்களது Superior Firepower இன் மூலம் Viet Minh படையணியின் பெரும்பகுதியை அழிக்கமுடியும் ஜெனரல் Henri Navarre கணித்திருந்தார்.

“OPERATION CASTOR” இன் ஏற்பாடுகள்

மேலே கூறிய இலக்கை அடிப்படையாக வைத்து பிரான்ஸ் இராணுவம் அதனது நகர்வுகளை தொடங்கியது.

இந்த இராணுவ தளத்திற்கான நிலப்பரப்பாக தீன் பீன் பூ (Dien Bien Phu) தெரிவு செய்யப்பட்டது.

இந்த தீன் பீன் பூ பிரதேசம் பிரான்ஸ் இராணுவத்தின் மிக முக்கிய தளம் இருந்த Hanoi இலிருந்து 320 கிமீ தூரத்தில் இருந்தது.

20/11/1953 அன்று தீன் பீன் பூ எனும் கிராமம் சார்ந்த பகுதியில், பிரான்ஸ் இராணுவம் Airborne Operation (விமானங்களினூடாக தரையிறக்கம்) இனுடாக 1800 paratroopers ஐ தரையிறக்கியது. இவர்கள் அடிப்படையில் போர்களத்தில் முனையாக செயற்பட்டு எதிரியை உடைத்து செல்லும் spearhead force.

இந்த paratroopers படை உடனடியாக தீன் பீன் பூ பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

அதை தொடர்ந்து மற்றைய படையணிகள் இறங்க தொடங்கின.

வழங்கலுக்கான பாதையை உறுதிப்படுத்தும் விதமாக உடனடியாக இரண்டு விமான ஓடுபாதைகள் உருவாக்கப்பட்டன. (Two airfields were quickly built to ensure a supply link.)

இந்த தளத்திற்கான பொறுப்பில் இருந்தவர் Colonel Christian de Castries.

இந்த தளத்தில் இருந்த படையணியின் எண்ணிக்கை 15000 பேர், heavy and medium ஆர்ட்டிலறிகளின் எண்ணிக்கை 60, M24 Chaffees யுத்த தாங்கிகளின் எண்ணிக்கை 10, napalm-armed Bearcat Fighter விமானங்களின் எண்ணிக்கை 6 என்பவற்றை  கொண்டதாக இந்த தளம் பலப்படுத்தப்பட்டது.

இந்த தளத்தை சுற்றி சிறு மினி முகாம்களாக 9 defensive boxes அமைக்கப்பட்டன. அந்த சிறு மினி முகாம்களின் பெயர்கள் பின்வருமாறு.

Eliane, Claudine, Huguette, Francoise, Dominique, Anne Marie, Gabrielle, Beatrice, Isabelle.

இப்பொழுது பிரான்ஸின் இராணுவ தளம் பலமான சூட்டுவலுவுடன், போதுமான ஆளணியுடன் தயாராக இருந்தது. அதன் பின்னர் Viet Minh இன் தாக்குதலை எதிர்பார்த்து மாதக்கணக்கில் காத்துகிடந்தது.

ஜெனரல் Henri Navarre தனது கணிப்பின் படி, Viet Minh இயக்கத்தின் தளபதி Vo Nguyen Giap இனால் அதிகப்படியாக இரண்டு டிவிசன் போராளிகளைத்தான் திரட்டமுடியும் என நினைத்திருந்தார். ஒரு டிவிசன் படையணி என்பது 10000-15000 படையினரை கொண்டது.

ஆனால் Viet Minh இயக்கத்தின் தயார்படுத்தல்களோ எதிர்பார்த்ததை விட வேறுமாதிரியாக இருந்தன.

Viet Minh இயக்கத்தின் தயார்படுத்தல்கள்

ஜூலை 1953 கொரிய யுத்தத்தின் முடிவிற்கு பிறகு சீன அரசு இரகசியமாக Viet Minh இயக்கத்திற்கு கனரக ஆயுதங்களை தர தொடங்கியிருந்தது.

Viet Minh இயக்கம் சீனாவின் ஊடாக light and medium field artillery, anti-aircraft guns, rocket launchers களை பெற்றுகொண்டது.

பிரான்ஸ் எதிர்ப்பார்த்ததிற்கு மாறாக நான்கு டிவிசன் போராளிகளை General Vo Nguyen Giap தீன் பீன் பூ பிரதேசத்திற்கு நகர்த்தியிருந்தார்.

Viet Minh இயக்கம் கிட்டத்தட்ட 200 ஆர்ட்டிலறிகளை கொண்டிருந்தது. இது பிரான்ஸ் இராணுவத்தின் 60 ஆர்ட்டிலறிகளை விட மூன்று மடங்கு அதிகம்.

தீன் பீன் பூ இராணுவ தளத்திலிருந்து தொலைவில் இருந்த மலைகளில் சுரங்க பாதைகளை அமைத்து நீண்ட தூர ஆர்ட்டிலறிகளை இராணுவ தளத்தை நோக்கி வைத்திருந்தனர். ஆர்ட்டிலறி சுடுகுழல்களின் முனை பகுதி மட்டுமே வெளியே நீட்டிகொண்டிருந்தன.

“Battle of Dien Bien Phu” தொடங்கியது

13/3/1954 அன்று General Vo Nguyen Giap கட்டளைப்படி, Viet Minh போராளிகள் இராணுவ தளம் மீதான தாக்குதலை ஆரம்பித்தனர்.

தாக்குதல் தொடங்கிய பின் Beatrice defensive box கைப்பற்றப்பட்டது. இந்த defensive box இராணுவ தளங்கள் அல்ல. அவை மினி முகாம் அளவிலானவை. இரண்டு நாட்களின் பின் Gabrielle வீழ்ந்தது. அதன்பின் Anne Marie யும் வீழ்ந்தது.

ஆனால் இந்த ஆரம்பகட்டதாக்குதலில் Viet Minh இன் 2500 இற்கும் மேற்பட்ட போராளிகள் உயிரிழந்தனர்.

இதன் பின்னர்  General Vo Nguyen Giap அடுத்த பத்து நாட்களுக்கு முற்றுகை வடிவிலான (siege tactics) முறைக்கு மாறினார்.

பின்னர் மீண்டும் 30/3/1954 அன்று ஆர்ட்டிலறிகளின் தாக்குதல் தொடங்கின.

அதற்கு பின்னர் Dominique, Francoise போன்றவை வீழ்ந்தன.

ஆனால் Viet Minh தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே சென்றன. மீண்டும் General Vo Nguyen Giap மேலதிக படைகளை தருவிக்க வேண்டியிருந்தது.

மே மாதம் 1 திகதிக்கு முன்னர் அவரால் 50000 போராளிகளை தீன் பீன் பூ தளத்தை சுற்றி நிறுத்தமுடிந்தது.

சரியாக 7/5/1954 அன்று, மொத்த தீன் பீன் பூ தளமும் Viet Minh கைக்குள் வீழ்ந்தது.

அடுத்து Battle of Dien Bien Phu ஐ போரியல் பார்வையுடன் அலசலாம்.

சூட்டுவலு (Fire Power)

General Henri Navarre தமது திட்டத்தை, Viet Minh ஐ தாக்குதலுக்கு தூண்டி, தமது Superior Firepower ஐ ஆதாரமாக வைத்து Viet Minh இன்  பெரும் படையை அழிப்பது என்பதாக வகுத்திருந்தார்.

இந்த OPERATION CASTOR” இன் அத்திவாரமே, பிரெஞ்சு படையணியின் Superior Firepower என்பதுதான்.

He devised a plan to lure the Viet Minh into a PITCHED BATTLE, in which his supposedly superior firepower would annihilate GIAP’s guerrillas.

சீனாவின் உதவியினால் Viet Minh அதனது சூட்டுவலுவை பிரான்ஸின் சூட்டுவலுவை விட அதிகரித்து வைத்திருந்ததனால், இந்த OPERATION CASTOR” இன் அத்திவாரமே உடைந்து போய்விட்டது.

Viet Minh – சுமார் 200 ஆர்ட்டிலறி, anti-aircraft guns.

பிரான்ஸ்- 60 heavy and medium ஆர்ட்டிலறிகள்.

ஆளணி 

பிரான்ஸின் இராணுவ தளத்தில் இருந்த படையணி அதிகபட்சம் 15000. இவர்களுள் கணிசமான எண்ணிக்கையில் உள்ள non-combatant workers உம் அடங்குவர்.

சமர் தொடங்கிய பின்பான காலகட்டத்தில் பிரான்ஸ் சுமார் 4300 படையினரை பாரசூட் வழியாக தரையிறக்கியிருந்தது. அதனால் எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்தால், பிரான்ஸ் இராணுவத்தின் படையணி 15000 என முடிவுக்கு வரமுடியும்.

Viet Minh தரப்பில், சமரின் ஆரம்ப கட்ட தாக்குதலில் சில ஆயிரம் போராளிகளை இழந்ததை பற்றி மேலே கூறியிருந்தேன். ஆனால் அத்தனை இழப்புகளுக்கு பின்னர் கூட, மே மாதம் நடத்திய இறுதி தாக்குதலின் போது 50000 இற்கும் மேற்பட்ட போராளிகள் இருந்ததாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது Viet Minh இன் ஆளணியானது பிரான்ஸ் படையணியை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமான ஆளணியை கொண்டிருந்தது என்பதை தெளிவாக காட்டுகிறது.

அடுத்தது Historical Minimum Planning Ratios

ஏற்கனவே கட்டுரை 1 இல் இதைப்பற்றி விவரித்திருந்தேன்.

Historical Minimum Planning Ratios இன் படி, தற்காப்பு முறையை (defensive) எதிரி எடுக்கும்போது, அவர்கள் நிலைகளின் பாதுகாப்பு நன்கு பலப்படுத்தப்பட்டு இருந்தால் (prepared and fortified) அந்த நிலைகளின் மீது தாக்குதலை (attack)  நடத்தும் படைகளின் எண்ணிக்கை குறைந்தது மூன்று மடங்காவது இருக்கவேண்டும் என கூறுகிறது.

இந்த Historical Minimum Planning Ratios படி, பிரெஞ்சு படையணியை தாக்கிய Viet Minh இன் ஆளணியானது தாக்குதல் தொடங்கிய கணத்திலிருந்து, இறுதி கணம் வரை கிட்டத்தட்ட நான்கு மடங்காக இருந்ததை காணலாம்.

பல ஆயிரம் Viet Minh போராளிகளை ஆரம்ப கட்ட தாக்குதலில் இழந்தபின்னரும், தளபதி Vo Nguyen Giap இனால் மேலதிக படைகளை தருவிக்க முடிந்தது.

The guerrillas’ loses were enormous, and GIAP once more drew back to reinforce and regroup his forces. By 1 May, he had assembled 50,000 men around DIEN BIEN PHU.

(John Macdonald எழுதிய Great Battlefields of the World” எனும் நூலிலிருந்து)

Force Ratio

இந்த Force Ratio தொடர்பான விளக்கத்தை,  இந்த தொடரின் முதல் இரு கட்டுரைகளிலும் விரிவாக தந்திருக்கிறேன். அதை வாசிக்கவும்.

Viet Minh போராளிகளுக்கு Force Ratio சாதகமாக இருப்பதை மேலே தந்த தரவுகளின் மூலம் எளிதாக உணரமுடியும்.

இதை இன்னும் வலுவான உதாரணம் மூலம் விளக்குகிறேன். அதுதான் Casualty Exchange Ratio.

Casualty Exchange Ratio என்பது என்ன?

இரு தரப்புக்கும் இடையிலான போரின் உயிரிழப்பு விகித்தை இது சுட்டி காட்டுகிறது.

நம்மில் ஒருவரின் உயிரிழப்பிற்கு எதிராக எதிரி தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற விகித கணக்கு.

இந்த Casualty Exchange Ratio பற்றியும், இந்த தொடரின் கட்டுரை 2 இல் விரிவாக விளக்கியிருக்கிறேன்.

Indochina War 1 இல் Viet Minh போராளிகளது இழப்பு பிரெஞ்சு படைகளின் இழப்பை விட மிக அதிகம். Casualty Exchange Ratio இன் படி Viet Minh போராளிகளின் இழப்பு அதிகமாக இருந்தும் அது போரியல்ரீதியாக பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. காரணம் Force Ratio அவர்களுக்கு எப்பொழுதும் பல மடங்கு சாதகமாக இருந்தது.

இதை தளபதி Vo Nguyen Giap  தனது பேட்டியொன்றில் பின்வருமாறு தெரிவித்திருப்பார்.

“No other wars for national liberation were as fierce or caused as many losses as this war,” GIAP told the Associated Press in 2005 in one of his last-known interviews with foreign media on the eve of the 30th anniversary of the fall of Saigon, the former South Vietnamese capital.

“But we still fought because for Vietnam, nothing is more precious than independence and freedom,” he said, repeating a famous quote by Ho Chi Minh.

இது தொடர்பில் அமெரிக்க இராணுவ தளபதி ஒருவர் தெரிவித்திருந்த கருத்தை இங்கு பதிய விரும்புகிறேன். அந்த கருத்து இரண்டு Indochina  War களிலும், தளபதி Vo Nguyen Giap தலைமையிலான போராளிகளின் (Viet Minh & Viet Cong) இழப்பை பற்றியது.

While some, such as the American journalist Stanley Karnow, regarded him as a strategist in the mold of Wellington, others, including the US general William Westmorland, believed his success was down to his ruthlessness.

Indeed, Westmorland complained to Karnow: “Any American commander who took the same vast losses as General Giap would have been sacked overnight.”

அமெரிக்க இராணுவ தளபதி William Westmorland இன் விமர்சனத்தை இங்கு குறிப்பிட்டதன் காரணம், Viet Minh போராளிகளின் இழப்பு அதிகமாக இருந்தது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டவே. குறிப்பாக Casualty Exchange Ratio இன் படி போராளிகளுக்கு எதிரானதாக இருந்தும் அவர்களின் Force Ratio பல மடங்கு சாதகமாக இருந்ததனாலேயே , Viet Minh போராளிகளால் போரை வெல்லமுடிந்தது.

மற்றும்படி 20ம் நூற்றாண்டின் Most Influential Commanders களில் ஒருவராக கருதப்படும் தளபதி Vo Nguyen Giap இன் ஆளுமையை, ஒரு இராணுவ தளபதியின் விமர்சனத்தை கொண்டு தட்டையாக அணுக நான் விரும்பவில்லை.

அடுத்தது Logistics 

Dien Bien Phu இராணுவ தளத்திற்கு என பின்தள உதவி என எதுவுமே இல்லை. முழுக்க முழுக்க விமான படை ஊடான உதவிகளை மட்டுமே பெறக்கூடிய வகையிலான பிரதேசம் அது. அதற்கான வழங்கலுக்கான பாதையை உறுதிப்படுத்தும் விதமாகவே இரண்டு விமான ஓடுபாதைகள் உருவாக்கப்பட்டன.

Dien Bien Phu இராணுவ தளம், பிரான்ஸ் இராணுவத்தின் மிக முக்கிய தளம் இருந்த Hanoi இலிருந்து 320 கிமீ தூரத்தில் இருந்ததை மேலே குறிப்பிட்டிருந்தேன்.

Viet Minh போராளிகள் Dien Bien Phu இராணுவ தளம் மீதான தாக்குதலை தொடங்கியபிறகு, தாக்குதலில் விமான ஓடு பாதைகள் சேதமடைந்தன. அதன்பிறகு விமான படையின் பராசூட் வழியாகவே சகலமும் இறக்கப்பட்டன.

Viet Minh artillery fire had destroyed the airstrip, so that all supplies and reinforcements for the French garrison had to be parachuted in.

(Great Battlefields of the World – John Macdonald)

இனி் விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் Viet Minh இன்  Battle of Dien Bien Phu சமரிற்கும் இடையிலான போரியல் பார்வையிலான ஒப்பீடு.

இந்த ஒப்பீட்டில் Viet Minh போராளிகளுக்கு சாதகமாக இருந்த போரியல் காரணிகளை பட்டியலிட்டிருக்கிறேன்.  அதே போரியல் காரணிகள் விடுதலை புலிகளுக்கு எதிராக இருந்ததையும் பட்டியலிட்டிருக்கிறேன்.

இதனூடாக உலகின் போரியல் வரலாற்றில் மற்றைய புரட்சியாளர்களுக்கு இருந்த சாதகமான விடயங்கள் விடுதலை புலிகளுக்கு எதிராக இருந்தும், விடுதலை புலிகள் நினைத்து பார்க்க முடியாத இராணுவ சாதனைகளை செய்தார்கள் என்பதை நிறுவுவதே இந்த கட்டுரையின் முக்கிய நோக்கமாகும்.

இந்த போரியல் பார்வையுடனான வரலாற்று உண்மையை அடுத்த தலைமுறைக்கு கடத்த நினைப்பது அடுத்த நோக்கமாகும்.

மற்றும்படி சகல புரட்சியாளர்களும் போற்றுதலுக்கு உரியவர்களே.

இந்த போரியல் ஒப்பீட்டை மிக சுருக்கமாக எண்ணிக்கை அடிப்படையிலேயே கீழே தந்திருக்கிறேன். ஏனெனில் இது தொடர்பான விரிவான விளக்கங்கள் இந்த தொடரின் கட்டுரை 1,2 இலே விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

ஆளணி

Battle of Dien Bien Phu

பிரெஞ்சு படையணிகள் கிட்டத்தட்ட 15000.

Viet Minh போராளிகளின் எண்ணிக்கை 50000 இற்கும் மேல்.

Unceasing Waves 3 ( Phase 3, Phase 4)

யாழ்குடா எனும் theater of war இல் இருந்த இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைந்தது 40000படையினர்.

ஆனால் தலைவர் பிரபாகரனின் Deception போரியல் நகர்வு மூலமாக இலங்கை இராணுவம் இரண்டாக உடைக்கப்பட்டது.

உடைக்கப்பட்ட பின்னர், ஓயாத அலைகள் 3 இன் போது பங்குபற்றிய இலங்கை இராணுவம் குறைந்தது 25000.

விடுதலை புலிகளினால் அதிகபட்சமாக ஒதுக்கப்பட்ட போராளிகளின் எண்ணிக்கை 7000 ஐ தாண்டாது. (இது அனுமானம் மட்டுமே. இதற்கான விரிவாக விளக்கம் கட்டுரை 1 இல் தரப்பட்டுள்ளது)

சூட்டுவலு (Fire Power)

Battle of Dien Bien Phu

பிரெஞ்சு படையின் சூட்டுவலு

heavy and medium ஆர்ட்டிலறிகளின் எண்ணிக்கை 60

M24 Chaffees யுத்த தாங்கிகளின் எண்ணிக்கை 10

napalm-armed Bearcat Fighter விமானங்களின் எண்ணிக்கை 6

Viet Minh இயக்கத்தினது சூட்டுவலு

சுமார் 200 ஆர்ட்டிலறி, anti-aircraft guns

Unceasing Waves 3 ( Phase 3, Phase 4)

விடுதலை புலிகளின் சூட்டுவலு

இரண்டு 122 mm howitzers உள்ளடங்கலாக மூன்று ஆர்ட்டிலறிகளும், 120 mm Mortars சுமார் 10 மட்டும்தான்.

ஆனால் (UW3 -P3,P4) இல் விடுதலை புலிகளால் அழிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் ஆர்ட்டிலறிகள் மட்டுமே குறைந்தது 30 ஐ தாண்டும்.

அத்துடன் குறைந்தது 6 யுத்த தாங்கிகள் (Main Battle Tank-MBT) முற்றாக அழிக்கப்பட்டன. மேலும் 10 யுத்த தாங்கிகள் கடுமையான சேதத்திற்கு உள்ளாகின.

மேலும் Mi -24 attack helicopter சுட்டு வீழ்த்தப்பட்டது.

மேலே பட்டியலிடப்பட்டவை (UW3 -P3,P4) சமரில் விடுதலை புலிகளினால் அழிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் சூட்டுவலு.

இலங்கை இராணுவத்தின் வசம் இருந்த அல்லது யாழ்குடா எனும் theater of war இற்கு நகர்த்தப்படக்கூடிய ஆர்ட்டிலறிகளின் எண்ணிக்கை குறைந்தது 150.

இலங்கை  விமானப்படையில் இருந்த combat aircraft, attack helicopter இன் எண்ணிக்கை குறைந்தது 30.

Logistics (பின்தள உதவி வழங்கல்)

மேலே குறிப்பிட்டது போல Dien Bien Phu இராணுவதளம் எந்த வித பின் தளங்களின் உதவியும் இல்லாமல், மேலதிக படைகள்,வழங்கல் என்பவற்றுக்கு விமான படையை மட்டுமே சார்ந்திருக்கும் தளமாக இருந்ததை நீங்கள் அறியலாம்.

ஆனால் ஆனையிறவு பெருந்தளம் என்பது ஒற்றை தளம் அல்ல. அதைப்போலவே உள்ள பல இராணு பெருந்தளங்களை  பின் தள உதவியாக கொண்ட தொகுப்பு அது. அதனாலேயே எனது கட்டுரை 1 இல் இராணுவ பெருந்தளங்களின் தொகுப்பு என்ற சொல்லாடலை பயன்படுத்தினேன்.

இந்த இராணுவ பெருந்தளங்களின் தொகுப்பில் ஆனையிறவு பெருந்தளம், இயக்கச்சி பெருந்தளம், பெரும் எண்ணிக்கையான ஆட்டிலறிகளை கொண்ட தளமான பளை இராணுவ தளம், அமெரிக்க சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோ அணியான 53வது டிவிசனின் தாளையடி இராணுவ பெருந்தளம், இராணுவ, கடற்படை தளமான வெற்றிலைக்கேணி பெருந்தளம், தெற்கு பகுதியில் பரந்தன், உமையாள்புரம் எனும் இரு பெருந்தளங்கள், அதற்கு அடுத்த அடுக்கில் இவைகளின் பின்பலமாக பல இராணுவ முகாம்கள், பின் அதற்கு அடுத்த அடுக்கில் இவைகளுக்கெல்லாம் பாதுகாப்பு அரணாக நூற்றுக்கணக்கான மினி இராணுவ முகாம்கள்  இருந்தன.

இந்த சகல பெருந்தளங்களும், இராணுவ முகாம்களும், மினி முகாம்களும் ஒன்றோடு ஒன்று தங்களுக்கு இடையில் சில கிலோமீற்றர் தூரத்தில் பின்னப்பட்டிருந்தன.

(இந்த இராணுவ பெருந்தளங்களின் தொகுப்பில் அடங்கிய சகல பெருந்தளங்களையும், இராணுவ முகாம்களையும், சகல மினி முகாம்களையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், நீங்கள் கட்டுரை 1 ஐ கட்டாயம் வாசித்தாக வேண்டும்.)

Dien Bien Phu போன்ற வெறும் ஒற்றை தளம் அல்ல ஆனையிறவு இராணுவ பெருந்தளங்களின் தொகுப்பு.

நான் மேலே கூறிய சகல இராணுவ பெருந்தளங்களும் (UW3 -P3,P4)  சமரில் முற்றாக அழிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன.

அடுத்தது Historical Minimum Planning Ratios

இந்த Historical Minimum Planning Ratios படி,

Dien Bien Phu எனும் நன்கு பலப்படுத்தப்பட்ட (prepared and fortified) இராணுவ தளத்தை தாக்குவதற்கு, Viet Minh இன் ஆளணியானது தாக்குதல் தொடங்கிய கணத்திலிருந்து, இறுதி கணம் வரை கிட்டத்தட்ட நான்கு மடங்காக இருந்ததை காணலாம்.

ஆனால் (UW3 -P3,P4) சமரிலோ தலைகீழாக, prepared and fortified ஆக இருந்த பெரும் இராணுவ தளங்களின் தொகுப்பில் இருந்த இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கை தாக்குதல் நடத்திய விடுதலை புலிகளின் எண்ணிக்கையை விட நான்கு மடங்காக இருந்ததை காணலாம். அதாவது இலங்கை இராணுவத்தினர் குறைந்தது 25000. அதற்கு மாறாக விடுதலை புலிகளின் எண்ணிக்கை அதிகபட்சம் 7000.

இறையாண்மை அரசின் உதவி

Battle of Dien Bien Phu இன் போது, Viet Minh போராளிகளது சூட்டுவலு (Fire Power) பிரெஞ்சு படையணியை விட பலமாக மாறியதற்கான அடிப்படை காரணம் சீனாவின் உதவியே. சீனா தந்த கனரக ஆயுதங்களின் உதவியினால் மட்டுமே இது சாத்தியமானது.

ஆனால் விடுதலை புலிகளின் ஆயுதப்போராட்ட வரலாற்றில் இன்னொரு இறையாண்மை அரசின் உதவி அவர்களுக்கு கிடைக்கவில்லை. (இதில் 1987 இற்கு முன்பு கிடைத்த இந்தியாவின் உதவி இந்த கட்டுரையின் மைய புள்ளியான  (UW3 -P3,P4) சமருடன் எந்த வகையிலும் தொடர்புடையதல்ல.)

ஆக விடுதலை புலிகளின்  (UW3 -P3,P4) சமரிற்கும் VietMinh இன்  Battle of Dien Bien Phu சமரிற்கும் இடையிலான போரியல் பார்வையிலான ஒப்பீட்டு பட்டியலை இதுவரை வாசித்து வந்த உங்களுக்கு ஒரு விடயத்தை தெளிவாக காணக்கூடியதாக இருக்கும்.

  • ஆளணி, சூட்டுவலு, Logistics, இறையாண்மை அரசின் உதவி எனும் போரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சகல காரணிகளும்Battle of Dien Bien Phu சமரில் Viet Minh போராளிகளுக்கு சாதகமாக இருந்ததையும், அதற்கு மாறாக இதே காரணிகள் (UW3 -P3,P4) சமரில் விடுதலை புலிகளுக்கு எதிராக இருந்ததையும் நீங்கள் தெளிவாக காணலாம்.

Battle of Dien Bien Phu சமரில் இறந்த பிரெஞ்சு படையினரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2500. அதேநேரம் Viet Minh போராளிகளின் இழப்பு 4000 இற்கும் மேல்.

Unceasing Waves 3 ( Phase 3, Phase 4) சமரில்

இறந்த இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைந்தது 3000 இற்கும் மேல். ஆனால் விடுதலை புலிகளின் தரப்பில் இறந்த போராளிகளின் எண்ணிக்கை 500 இற்கும் கீழே.

இங்கு Battle of Dien Bien Phu போது, சரணடைந்த பிரெஞ்சு படையணியை இதில் சேர்க்கவில்லை.

காரணம் முன்பு கூறியது போல உலகின் போரியல் வரலாற்றில் மற்றைய புரட்சியாளர்களுக்கு இருந்த சாதகமான விடயங்கள் விடுதலை புலிகளுக்கு எதிராக இருந்தும், விடுதலை புலிகள் நினைத்து பார்க்க முடியாத இராணுவ சாதனைகளை நிகழ்த்தக்கூடிய போரியல் ஆற்றலை கொண்டிருந்தார்கள் என்பதை போரியல் ஆய்வு பார்வையுடன் உங்களுக்கு விளங்க வைப்பதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

க. ஜெயகாந்த்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments