
தமிழீழத் தேசியக்கொடி வணக்க மரியாதை மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை மரியாதை!
புதிய தமிழ்ப் புலிகள் என ஆரம்பத்தில் உருவாக்கிய இந்த அமைப்பை மீண்டும் சீரமைத்து 1976ம் ஆண்டு மே மாதம் 5ம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களினால் பெயர் சூட்டப்பட்டு முழுமையான மக்கள் போராட்ட புரட்சிகர அமைப்பாக மாற்றியமைக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை மரியாதை. உலகின் பெரும்பாலான படைத்துறை கட்டமைப்பில் படைத்துறை மரியாதை (ஆடைவையசல ளுயடரவந) என்பது யாவரும் அறிந்த ஒன்றாகத்தான் இருக்கின்றது. பல தேசங்கள் பல விடுதலைப் போராட்டடங்களுக்கு பிறகு தேசிய படைகள் தமக்கு என்று தனிமையான சிறப்புடன் உயர்ந்து நிற்பதை நாம் வரலாறுகள் மூலம் அறிகின்றோம். அந்த வகையில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதலில் மாவீரர்களின் உயிரீகத்தினாலும்இ போராளிகளின் அர்ப்பணிப்பாலும்இ மக்களின் எழுச்சியினால் தமிழீழ விடுதலைப்போர் இந்த உலகில் தனிச்சிறப்புடன் வீறுகொண்டு எழுந்தது.
தமிழர்களின் தேசியப் படையாகிய தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை மரியாதை உலக படைகளின் மரபிலிருந்து சற்று மாறுபட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்ப காலத்தில் பொதுவாக உலகின் படித்துறைகள் கடைப்பிடிக்கும் படைத்துறை மரியாதையை (ஆடைவையசல ளுயடரவந) கடைப்பிடிதார்கள். அதன் ஆதாரங்களை ஆரம்ப காலத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தமிழீழ காவற்துறை அமைப்பை உருவாக்கிய நிகழ்வில் தமிழீழ காவற்துறையினரின் அணிவகுப்பின் மரியாதையை ஏற்கும் புகைப்படங்கள் கூறிநிற்கின்றன.
பின்னர் நாளடைவில் போராட்டம் உச்சம்பெற்று பரிமாண வளர்ச்சி பெற்றவேளை தமிழினம் தனிச் சிறப்புடன் இந்த வையகம் எங்கும் பயணிக்க வேண்டும் என்ற நோக்கோடு எம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை மரியாதையை தமிழர் பண்பாட்டு வாழ்வியலுடன் ஒன்றிப்போகும் வடிவில் உருவாக்கினார். தமிழரின் பண்பாட்டில் வணக்கம் கூறும்போது இருகை கூப்பி தலையை தாழ்த்தி வணக்கம் கூறுகின்றோம். அதையே சற்று படைத்துறை முறைப்படி ஒரு கையை நெஞ்சினில் வைத்தும் மற்றைய கையை நேராக அதன் பெருவிரல் நிகத்தின்பகுதி தரையை பார்த்த வண்ணம் உடல் நேராக நிமிர்வுடன் இருத்தல் வேண்டும்.
‘தமிழருக்கு என்று ஓர் தனித்துவமான மரியாதை இருந்தும்; படைத்துறை ரீதியிலும் தமிழனின் வீரத்தை பறைசாற்றும் மிடுக்குடன் அது நடைமுறைப் படுத்தப்பட்டு வந்தது.’ தமிழீழத் தேசியக்கொடி வணக்கத்தில்இ தமிழீழத் தேசிய எழுச்சி நிகழ்வுகளில்இ தமிழீழ படைத்துறை – நிர்வாக சார்ந்து கடைப்பிடிக்கப்பட்ட நிகழ்வுகாளான மாவீரர்கள் வித்துடல்கள் புதைகுழியில் விதைப்பின் போதும்இ போராளிகளின் அணிவகுப்பில் மற்றும் கௌரவிப்பு போன்ற நிகழ்விலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
தமிழரின் படைத்துறை மரியாதை வணக்கம் ஏன் தனிமையான சிறப்புடன் உருவாக்கம் பெற்று நடைமுறைப்படுத்தினேன் என விடுதலைத் தீப்பொறியில் விபரணத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேஇபிரபாகரன் அவர்களே நேரடியாக விபரிக்கிறார். இன்றளவும் தமிழரின் படைத்துறை கட்டுமானங்கள் மற்றும் நிர்வாக கட்டமைப்பில் தமிழரின் பண்பாட்டுக்கு அமைவாக யாவற்றையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வகுத்ததினால் எம்மினத்தின் வரலாற்றை உலகே இன்றும் வியந்து பார்க்கிறது.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’