களத்தில் நேரடியாக நின்ற போராளியின் பதிவு]
{லெப்.கேணல் ராதா வான்காப்புப் படையணி}
ஆனந்தபுர முற்றுகைச் சமரில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த சகல படையணிகளும் பங்குபற்றியிருந்தன. அதைப்போன்று லெப்.கேணல் ராதா வான்காப்புப் படையணியில் பின்கள பணியிலிருந்த எமது அணி போராளிகள் 40 பேர் ஆனந்தபுர முற்றுகை முறியடிப்புக்காக கணினிபிரிவின் 100ற்கு மேற்பட்ட பெண்போராளிகளை உள்ளடங்கிய தாக்குதல் அணியாக சென்றோம். எமது அணியை தாக்குதல் திட்டத்தின்படி மூன்று அணியாக பிரிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஒரு அணி தடையை உடைக்க மற்ற இரு அணிகளும் உள்நுழைவதே திட்டமாக இருந்தது. மார்ச்சு மாதம் 31 ம்திகதி எங்களது இரு அணிகள் ஆனந்தபுரத்தினுள் சென்றது ஒரு அணி ஆனந்தபுரத்திற்கு வெளியே பச்சைபுல்வெளியில் நிலை எடுத்தது. ஆனந்தபுர முற்றுகையிற்குள் எமது அணியினை சேர்ந்த 25ற்கு மேற்பட்ட நண்பர்களும் அதைபோன்று முற்றுகையை உடைப்பதற்கான முயற்சியில் 5ற்கு மேற்பட்ட நண்பர்களும் வீரச்சாவடைந்திருந்தனர். அதைப்போன்று எமது அணியுடன் வந்த பெண்போராளிகளில் பெரும்பாலானோர் வீரச்சாவடைந்தும் விழுப்புண் அடைந்திருந்தனர். இந்த ஆனந்தபுர முற்றுகைச் சமரில் வீரச்சாவடைந்த எமது அணியினர் விபரங்கள்,
1.லெப்.கேணல் அனுஷன்
2.லெப்.கேணல் கபிலன்
3.லெப்.கேணல் அந்தியாஸ்
4.லெப்.கேணல் இளவரசன்
5. லெப்.கேணல் ஆற்றலோன்
6. லெப்.கேணல் பெருங்கீரன்
7. லெப்.கேணல் ஏழிசை
8. லெப்.கேணல் மதிவர்மன்
9. லெப்.கேணல் வல்லவன்
10. லெப்.கேணல் குலம்
11. லெப்.கேணல் கண்ணன்
12. லெப்.கேணல் நிறஞ்சன்
13. லெப்.கேணல் தயாபரன்
14. லெப்.கேணல் மைந்தன்
15. லெப்.கேணல் வண்ணம்
16. மேஜர் வாணவன்
17. மேஜர் சோலையப்பன்
18. கப்டன் சுடரவன்
கால நீட்சியில் எமது நினைவுகளில் 18 நண்பர்களின் பெயர்களே நினைவில் உள்ளது. அதைபோன்று சில நண்பர்களின் புகைப்படங்களே எம்மால் சேகரிக்க முடிந்தது ஆனந்தபுர முற்றுகைச் சமரின் பதிவுகளை பதிய முற்பட்ட போதே காலம் பல நினைவுகளை அழித்துள்ளதை உணரமுடிகிறது. எம்மை போன்று வாழும் சகமுன்னால் போராளிகள் உங்களுடன் உடன் களமாடிய நண்பர்களின் நினைவுகளையும் தியாகங்களையும் பதிவிடுங்கள் ஒரு போராளியின் சாவு சாதாரண சாவல்ல அது தமிழீழ விடுதலைக்கான வரலாறு.