அல்லைப்பிட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்கில் உள்ள வேலணைத்தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். அலைகள் வந்து மணல் மேட்டுத் தரையை தொட்டுச்சென்றதால் அல்லைப்பிட்டியென்று பெயர் பெற்றதாகவும். அல்லிகொடிகள் படர்ந்து பரந்திருந்த நிலம் என்பதால் அல்லிப்பிட்டி என அழைக்கப்பட்டு பின்னர் அல்லைப்பிட்டியாக மாறியுள்ளதாகவும் ஓர் கருத்து நிலவிவருகிறது. பெரும் மணல் பிட்டிகள் இருந்த ஊராக அல்லப்பிட்டி இருந்தாலும் காலப்போக்கில் மணல் அகழ்ந்து எடுக்கப்பட்டு இன்று சமதரையாக நிலவுகின்றது. விவசாயம் மற்றும் மீன்பிடியும் பெரும் பொருளாதார வளமாக இங்கு காணப்படுகின்றது, ஒருகாலத்தில் பெரும் நிதிப்பயிராக புகையிலை மற்றும் மிளகாய் வெங்கயச்செய்கைகள் இருந்துவந்தன.
ஒல்லாந்தர் காலத்தில் இது ஒரு வணிகத் துறைமுகமாக இருந்திருக்கிறது, இங்கு பெறப்பட்ட பழங்கால பொன்நாணயங்கள் முத்துமலைகள் குஜராத் தங்கம் என்பன இது ஒரு வணிகத் துறைமுகம் என்பதையும் வெளிநாட்டுத் தொடர்புடைய ஊர் என்பதையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் சீன அகழ்வாராட்சியாளர்கள் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில் 600 பழங்கால சீன மட்பாண்டத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது. கடந்த செப்ரெம்பர் 29ஆம் திகதி இந்த கண்டுபிடிப்புகள் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் ‘சைனா டெய்லி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈழ தேசத்தின் முக்கிய வளமான கற்பகதரு ஊற்பத்தியில் மிகச்சிறந்த இடமாக அல்லைப்பிட்டி விளங்கியது பனை வேலை கைவினைப் பொருட்களுக்கு புகழ்பெற்ற இடமான அல்லைப்பிட்டி இன்றும் அதன் தொடர்சியை ஆங்காங்கே வெளிக்காட்டி நிற்கிறது. பழமையான கலைகளைப் போற்றும் முறை அல்லைப்பிட்டியில் இன்றும் தொடர்கிறது நாட்டுக்கூத்து, வடமோடி, தென்மோடி, நொண்டி நாடகம் ,பூதத்தம்பி நாடகம் என்பன சிறப்புற ஆரங்கேற்றப்பட்டு வருகிறன.
கவிஞர்கள்,அறிஞர்கள்,படைப்பாளிகள்,கல்வியாளர்கள்,உழைப்பாளிகள் போராளிகள்,மாவீரார்கள் என பலரை இந்த தாய் தேசத்துக்கு தந்த அல்லைப்பிட்டி பல துயரங்களையும் தாங்கி நிமிர்ந்து நிற்கிறது. 2006இ மே 13 சனிக்கிழமை இரவு வேலணையின் அல்லைப்பிட்டி புளியங்கூடல் வங்களாவடி ஆகிய கிராமங்களில் இப்படுகொலைகள் இடம்பெற்றன. இம்மூன்று கிராமங்களிலும் இலங்கைக் கடற்படயினர் வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்தோர் மீது துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர். அல்லைப்பிட்டியில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் ஒரே வீட்டில் கொல்லப்பட்டனர். 2006.08.13 இல் அல்லைப்பிட்டி புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் எறிகணைத் தாக்குதல் இலங்கைப் படைத்துறையினரால் நடத்தப்பட்டது இத்தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர்இ மேலும் 54 பேர் காயமடைந்தனர். எல்லாவற்றையும் தாண்டி இன்றும் தன் புகழோடும் தேச உணர்வோடும் சுடர்விடும் மக்களை சுமந்து தூய மனதோடு சிறந்து விளங்குகின்றது அல்லப்பிட்டி
வட்டக்கச்சி – வினோத்